சித்தோர்கார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சித்தோர்கார் அல்லது சித்தூர் (Chittorgarh) (Hindi: चित्तौड़गढ़) ⓘ மேற்கு இந்திய மாநிலமான இராஜஸ்தானின் சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். காம்பிர் ஆற்றாங்கரையில் அமைந்த இந்நகரம் முன்னர் மேவார் சிசோடியா இராசபுத்திர குலத்தின் தலைநகராக விளங்கியது. மேவார் இராச்சியத்தின் தலைநகராக சித்தூர் விளங்கியது.[1]
ராணி பத்மினி மற்றும் ராணி கர்ணாவதி, சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து போரிட்டுக் காத்தனர். 1303இல் அலாவுதீன் கில்சி சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டார், 1598இல் முகலாயப் பேரரசர் அக்பர் சித்தூரை கைப்பற்றினார். சித்தூர் கோட்டை இந்தியாவின் பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். சித்தூரின் மீராபாய் சிறந்த கிருஷ்ண பக்தை ஆவார்.
Remove ads
கூட்டுத் தீக்குளிப்பு
சித்தூர் கோட்டையை இசுலாமிய மன்னர்கள் கைப்பற்றும் போது, இராசபுத்திர அரச குலப் பெண்கள் எதிரி மன்னர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைவிட, பெரும் தீ வளர்த்து அதில் கூட்டுத்தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்கள்.
போக்குவரத்து
தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் சித்தூர் நகரம் அமைந்துள்ளதால், நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள்


கல்வி
- மேவார் பல்கலைக்கழகம்
- சைனிக் பள்ளி
- கேந்திரிய வித்தியாலம்
- புனித பவுல் உயர்நிலை பள்ளி
- தில்லி பப்ளிக் ஸ்கூல்
- ஜவஹர் நவோதய வித்தியாலயம்
- பிர்லா மேனிலைப் பள்ளி Birla Shiksha Kendra, Chanderiya, Chittorgarh
- மகாராணா பிரதாப் அரசு மேற்படிப்பு கல்லூரி
- ஆர் என் டி சட்டக் கல்லூரி
- இராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி (RIET)
தொழிற்சாலைகள்
- இந்துஸ்தான் சிங்க் தொழிற்சாலை
- பிர்லா சிமெண்ட் தொழிற்சாலை
சித்தூர் காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads