சிந்தனை செய்

2009 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிந்தனை செய் (Sindhanai Sei) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநரான ஆர். யுவன் எழுதி இயக்கிய, இந்த படத்தில் ஆர். யுவன், மது சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் ஷாபி, நிதிஷ் வீரா, சசாங்க், பாலா, தர்ஷா, அஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கில்லி சேகர் மற்றும் அம்மா ராஜசேகர் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்திற்கான இசையை எஸ். தமன் அமைத்தார். இப்படமானது 2009 சூலை 31 அன்று வெளியானது. இந்த படம் தெலுங்கில் பீபட்சம் . என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் சிந்தனை செய், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

யுவன், நிதிஷ், பாலா, சோக்கத், சபி ஆகியோர் பள்ளியிலிருந்து நண்பர்கள். வளர்ந்த பிறகு ஐவரும் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இப்படி சிறுகசிறுக திருடுவதற்கு பதிலாக பெரிய அளவில் திருடி பணக்காரராக திட்டமிடுகின்றனர். அதன்படி திட்டடமிட்டு ஒரு வங்கியில் ஐந்து கோடியை கொள்ளை அடிக்கின்றனர். அந்த ஐந்து கோடியை பணத்தாசையால் முழுமையாக அபகரிக்க நினைத்து நண்பர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரை கொல்ல திட்டமிடுகின்றனர். அதில் யார் வெற்றிபெற்றார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

Remove ads

நடிப்பு

தயாரிப்பு

தெலுங்குத் திரைப்பட நடன இயக்குனரான அம்மா ராஜசேகரின் சகோதரர் ஆர். யுவன் (பிரபு சேகர்) சிந்தனை செய் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவர் படத்தின் நாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை வசனத்தை எழுதி படத்தை இயக்கியுள்ளார்.[1] எஸ். தமன், படத்தின் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆர். யுவனின் சகோதரர் கில்லி சேகர் சண்டை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த படம் ஐந்து இளைஞர்களின் உளவியலைப் படப்பிடிக்கிறது.[2]

இசை

இப்படத்திற்கான பாடல் இசை, பின்னணி இசை போன்றவற்றை இசையமைப்பாளர் எஸ். தமன் மேற்கொண்டார்.

தமிழ் பதிப்பின் இசை 2008 நவம்பர் 9 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. விழாவின் முக்கிய விருந்தினராக அர்ஜுன் கலந்து கொண்டார். மேலும் பூபதி பாண்டியன், தரணி, டி. சிவா, வெங்கட் பிரபு, ஏ. எம். ரத்னம் ஆகியோரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.[1][3][4] இதன் தெலுங்கு பதிப்பின் இசை 2008 நவம்பர் 7 அன்று ஐதராபாத்தில் உள்ள பிரசாத் லேபில் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் எஸ். எஸ். ராஜமௌலி, விவி விநாயக், கே. விஜய பாஸ்கர், ஸ்ரீஹரி ஆகியோர் விழாவில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.[2][5]

மேலதிகத் தகவல்கள் தமிழ் பாடல்கள், # ...
Remove ads

வெளியீடு

இந்த படம் 2009 சூலை 31 அன்று வெளியான பிற நான்கு படங்களுடன் வெளியிடப்பட்டது.[6]

வணிகம்

இந்தப் படம் சென்னையில் சராசரியான துவக்க வசூலை ஈட்டியது.[7][8]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads