சிந்தாமணி திரையரங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிந்தாமணி திரையரங்கம் (Chinthamani theatre), தமிழ்நாட்டின் மதுரை மாநகரத்தின் மையத்தில் கீழவெளி வீதியில் இருந்த திரையரங்கம் ஆகும். இத்திரையரங்கத்தை என். எம். இராயலு அய்யரின் மகன்களும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த என். எம். ஆர். சுப்பராமனின் அண்ணன்மார்களான என். எம். ஆர். வெங்கடகிருஷ்ணய்யர் மற்றும் என். எம். ஆர். சேஷய்யர் ஆகியோர்களால 13 மே 1939 அன்று தொடங்கப்பட்டது. இச்சகோதரர்கள் இராயல் டாக்கீஸ் (Royal Talkies) எனும் நிறுவனத்தை நிறுவி, திரைப்பட தயாரிப்புப் பணிகள் மற்றும் திரைப்பட வினியோகப் பணிகள் செய்து வந்ததுடன்[1], சென்னை மாகாணம் முழுவதும் சாயப்பவுடர் விற்கும் தொழிலும் செய்து வந்தனர்.[2]

இராயல் டாக்கீஸ் நிறுவனத்தினர் 1937-இல் தயாரித்து, வெளியிட்ட சிந்தாமணி திரைப்படத்தின் மூலம் ஈட்டிய இலாபத் தொகையைக் கொண்டே சிந்தாமணி திரையரங்கம் கட்டப்பட்டது. இலண்டன் நகரத்தின் ஓடியன் திரையரங்கத்தின் கட்டிட வடிவத்தில் இத்திரைப்படம் கட்டப்பட்டது. மேலும் இத்திரையரங்கில் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளிகளைக் கடந்து 770 நாட்கள் ஓடியது. [3]

தொடர்ந்து வெற்றிகரமாக எம். ஜி. ஆர்., சிவாஜி, பாக்கியராஜ், ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற பிரபல நட்சத்திர நடிகர்கள் நடித்த திரைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்த இத்திரையரங்கம் காலப்போக்கில், 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து நட்டம் ஈட்டியதால், 2008-ஆம் ஆண்டில் சிந்தாமணி திரையரங்கத்தை மதுரை ராஜ்மகால் துணிக்கடை நிறுவனத்திற்கு விற்றனர். ராஜ்மகால் துணிக்கடையினர் இத்திரையரங்கை இடித்து 6 மாடி கொண்ட துணிக்கடையை நிறுவினர்.[4][5][6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads