ஹரிதாஸ் (1944 திரைப்படம்)
சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 10 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 784 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.[2][3][4][5][6][7]
ஐபிஎன் லைவ் தனது எல்லாக் காலத்திற்குமான 100 சிறந்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 'ஹரிதாசையும்' சேர்த்தது.[8] கலையகத் தொழிநுட்பவியலாளர்களால் கையால் வண்ணம் தீட்டப்பட்ட ஒரே ஒரு காட்சி தவிர ஏனையவை கருப்பு-வெள்ளைப் படமாக இது முதலில் வெளியிடப்பட்டது. 1946-இல் முழு வண்ணத்துடன் மீண்டும் வெளியிடப்பட்டது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்கு முன் வெளிவந்த தியாகராஜ பாகவதரின் கடைசிப் படம் இதுவாகும்.
Remove ads
திரைக்கதை

அரிதாஸ் (எம். கே. தியாகராஜ பாகவதர்) கம்மாளர் (பொற்கொல்லர்) குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (என். சி. வசந்தகோகிலம்) சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்) உதவியுடன் ரம்பா (டி. ஆர். ராஜகுமாரி) என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.[9]
ரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அவர்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் (பி. பி. ரெங்காச்சாரி) கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான்.[9]
Remove ads
நடிப்பு
Remove ads
பாடல்கள்
இத்திரைப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[9] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்..[9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads