சிந்து ஆற்றின் வடிநிலம்

From Wikipedia, the free encyclopedia

சிந்து ஆற்றின் வடிநிலம்
Remove ads

சிந்து ஆற்றின் வடிநிலம் (Indus River Delta), பாகிஸ்தான் நாட்டின் பாயும் சிந்து ஆறு அரபிக் கடலில் கலக்குமிடத்தில் உண்டான வடிநிலம் ஆகும். இந்த வடிநிலத்தின் ஒரு பகுதியானது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வடிநிலத்தின் பரப்பளவு 41,440 km2 (16,000 sq mi) மற்றும் சிந்து ஆறு அரபிக் கடலில் கலக்குமிடத்தில் பரப்பளவு 210 km (130 mi) ஆக உள்ளது. இவ்வடிநிலத்தின் செயற்பாட்டில் உள்ள பரப்ப்பளவு 6,000 km2 in area (2,300 sq mi). ஆகும். இவ்வடிநிலப் பகுதியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 25 மற்றும் 50 சென்டிமீட்டர்கள் (9.8 மற்றும் 19.7 அங்) ஆகும். இந்த வடிநிலத்தில் உலகின் பெரிய சதுப்பு நிலக் காடுகள், பறவைகள், மீன்கள் மற்றும் சிந்து டால்பின்களைக் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் Designations, Invalid designation ...
Thumb
சிந்து ஆற்றின் வடிநிலம்

2003ஆம் ஆண்டின் சிந்து வடிநிலத்தின் மக்கல் தொகை 9,00,000 ஆக மதிப்பிடப்பட்டது. இருந்தது..[2]பெரும்பாலான சிந்து வடிநில மக்கள் வேளாண்மை மற்றும் மீன் பிடித்தொழிலை மட்டும் நம்பியுள்ளனர். இங்குள்ள சதுப்பு நிலக் காடுகள் எரிப்பதற்காக மரங்களை தருகிறது. பஞ்சாப் மாகாணத்தவர் அதிகப்படியான சிந்து ஆற்றின் நீரை வேளாண்மைக்கு பயன்படுத்துவதால், சிந்து வடிநிலப் பகுதியில் நீர் வரத்து குறைந்து கொண்டே செல்கிறது.

Remove ads

புவியியல்

சிந்து வடிநிலத்தில் அரபுக் கடல் கடற்கரையின் நீளம் 210 km (130 mi)[3] 220 km,[4], 240 km (150 mi).[5][6] ஆகும். இதன் பரப்பளவு 29,524 km2 (11,399 sq mi)[6] 30,000 km2 (12,000 sq mi)[4], 41,440 km2 (16,000 sq mi) ஆகும்.[3] சிந்து ஆறு அரபுக் கடலில் கலக்குமிடத்தில் 17 பெரிய கடற்கழிகள் உள்ளன.[2]

சிந்து ஆற்றின் 180 பில்லியன் கன சதுர மீட்டர்கள் (240 பில்லியன் cubic yards) அளவு நீர் இவ்வடிநிலத்தின் வழியாக அரபுக் கடலில் கலக்கிறது.[2] சிந்து ஆற்றின் நீரில் அதிகப்படியான அளவு பஞ்சாப் மாகாணத்தவர் வேளாண்மைக்கு பயன்படுத்துவதால், சிந்து வடிநிலத்தில் வரும் நீர் 1994ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது.

சிந்து நதி வடிநிலப்பகுதியின் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 250–500 mm (9.8–19.7 அங்) ஆகும். சூலை மாத சராசரி வெப்பம் 21 முதல் 30 °C (70 முதல் 86 °F) ஆகும். சனவரி மாதத்தில் சராசரி வெப்பம் 10–21 °C (50–70 °F) ஆகும்.[7]

தென்மேற்கு பருவ மழைக் காலத்தின் போது, இந்த வடிநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடல் நீரால் சூழப்பட்டிருக்கும். இதனால் சிந்து வடிநிலத்தில் உப்பு படிந்து காணப்படும்.

Remove ads

உயிரியற் பல்வகைமை

தாவரங்கள்

சிந்து வடிநிலம் உலகின் பெரிய சதுப்பு நிலக்காடுகளைக் கொண்டுள்ளது. இந்த சதுப்பு நிலக்காடுகள் 1980ஆம் ஆண்டில் 600,000 எக்டேர்கள் (1,500,000 ஏக்கர்கள்) பரப்பளவில் இருந்த சதுப்பு நிலக் காடுகள், மக்கள் தொகை பெருக்கத்தால், தற்போது சிறிது சிறிதாக அழிந்து கொண்டு வருகிறது. தற்போது சதுப்பு நிலக்காடுகளை கீழ்கண்ட 3 நிறுவனங்கள் கட்டுப்படுத்துகிறது. - சிந்து மாகாண அரசின் வனத்துறை (280, 470 எக்டேர்) - காசிம் துறைமுக நிறுவனம் 64, 400 எக்டேர்) - சிந்து மாகாண அரசின் வருவாய்த் துறை (255, 130 எக்டேர்)[8]

விலங்கினங்கள்

குளிர்காலங்களில் சிந்து வடிநிலப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகிறது. மேலும் இவ்வடிநிலத்தில் மீன்கள் மற்றும் சிந்து டால்பின்களைக் கொண்டுள்ளது.

Remove ads

மக்கள் தொகை

சிந்து ஆற்றின் வடிநிலத்த்தின் மொத்த மக்கள் தொகை 2003ஆம் ஆண்டில் 9 இலட்சம் ஆகும். 75% மக்கள் சிந்து வடிநிலத்தின் சதுப்பு நிலக்காடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[2] இவ்வடிநிலத்தின் கீழ் பகுதியில் மல்லா, மோகனா, சூம்ரோ, சம்மா, சிந்தி ஜாட் மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலும் சிந்தி மொழி பேசி, இசுலாம் சமயத்தை தழுவி வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

சிந்து வடிநிலத்தின் முதன்மை பொருளாதாரம் வேளாண்மை மற்றும் மீன் பிடித்தொழில் ஆகும்.

மேற்கோள்கள்

ஆதார நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads