சிந்து நீர் ஒப்பந்தம்

இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான ஒப்பந்தம் From Wikipedia, the free encyclopedia

சிந்து நீர் ஒப்பந்தம்
Remove ads

சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாக்கிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960-இல் ஏற்பட்டதாகும்.[1][2]அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாக்கிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக ஒப்பமிட்டது.[3]

Thumb
சிந்து நதியின் துணை ஆறுகளான ஜீலம், செனாப், பியாஸ், சத்லஜ், ராவி ஆறுகள்

இதன் படி சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்குப் பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்குப் பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன. இதன்படி கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவிற்கும் மேற்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கும் உரிமை வழங்கப்பட்டது. கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காகக் பாக்கிஸ்தானுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.

இவ்விரு நாடுகளும் இவ்வொப்பந்தம் தொடர்பான தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் ஒத்துழைக்கவும் நிரந்தரமான ஓர் ஆணையத்தை ஏற்படுத்தின. அது சிந்து ஆணையம் என அழைக்கப்பட்டது. இவ்விரு நாடுகள் சார்பிலும் ஓர் ஆணையர் அதற்கு நியமிக்கப்படுகின்றனர்.

Remove ads

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்

22 ஏப்ரல் 2025 அன்று பாக்கிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் ஒரு கிளையாக எதிர்ப்பு முன்னணி அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து இந்திய அரசு பாக்கிஸ்தானுடன் செய்துகொண்ட சிந்து நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், சிந்து ஆற்றின் நீர் பாக்கிஸ்தானுக்குச் செல்ல முடியாதபடி தற்காலிகமாக தடுத்துள்ளது..[4][5][6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads