2025 பகல்காம் தாக்குதல்

இந்தியாவில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் From Wikipedia, the free encyclopedia

2025 பகல்காம் தாக்குதல்
Remove ads

2025 பகல்காம் தாக்குதல் (2025 Pahalgam attack) என்பது 22 ஏப்ரல் 2025இல் பாக்கித்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை நிறுவனமான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்டின் தீவிரவாதிகள், இந்தியாவின் சம்மு-காசுமீரில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நிகழ்வாகும். இதில் தற்போது வரை 28 பேர் இறந்துள்ளனர், மேலும் 20-இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விரைவான உண்மைகள் இடம், நாள் ...
Remove ads

பின்னணி

1989 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உருவான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெறுகிறது. அண்மைய ஆண்டுகளில் வன்முறை கணிசமாகக் குறைந்திருந்தது. 2019 ஆம் ஆண்டில், இந்தியா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து ஜம்மு-காஷ்மீர், இலடாக் என இரண்டு ஒன்றியப் பகுதிகளாகப் பிரித்தது. இந்நடவடிக்கையானது உள்ளூர் அதிகாரிகளுக்கு இதற்கு முன்னர் தகுதி பெறாத மக்களுக்கு வசிப்பிட அந்தஸ்து வழங்க அதிகாரம் அளித்தது. இதன்மூலம் சம்மு காசுமீரில் நிலம் வாங்கவும் வேலைகளைப் பெறவும் வாய்ப்பளிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விதிகளின் கீழ் 83,000 பேருக்கு இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக வருவாய் அமைச்சர் ஏப்ரல் 10 அன்று தெரிவித்தார்.[6][7] போர்ப்சின் கூற்றுப்படி, காஷ்மீர் ஏற்கனவே உலகிலேயே மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியாக இருந்தது.[8]

இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியா ஒரு பெரிய பொதுமுடக்கத்தைத் தொடங்கியது. இதனால் காஷ்மீர் பிரச்சனையில், பாக்கித்தானுடனான உறவு மேலும் மோசமடைந்தது. இந்தியா இப்பகுதியில் சுமார் 500,000 பாதுகாப்புப் படையினரை நிரந்தரமாக நிறுத்தியது.[6][9]

Remove ads

தாக்குதல்

காசுமீரின் தொலைதூரச் சுற்றுலாத் தலமான பகல்காமுக்கு அருகிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று சுமார் 14:50 மணி அளவில் நான்கு முதல் ஆறு தீவிரவாதிகள்[10] தாக்குதல் நடத்தினர்.[11]

தீவிரவாதிகள் எம்4 சிறுதுபாக்கி, ஏகே-47 ஆகியவற்றைப் பயன்படுத்தினர். பல நாட்களாக பெய்த மழைக்குப் பிறகு, பரவலான சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்திற்கு வந்தனர். தப்பிப்பிழைத்தவர்களின் கூற்றுப்படி, அருகிலுள்ள காடுகளில் இருந்து இராணுவ சீருடையில் வந்தவர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.[12][13][14]

Remove ads

இந்து சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல்

போராளிகள் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களையும் மதங்களையும் கேட்டனர்,[15] மற்றும் குறிப்பாக இந்துக்களை இலக்கு வைத்தனர்.[16] தாக்குதலாளர்கள் இந்து ஆண்களை முஸ்லிம் ஆண்களிடமிருந்து பிரித்த பின்னர் கொன்றனர்.[17] சில சுற்றுலாப் பயணிகளை போராளிகள் மதத்தின் அடிப்படையில் பிரிப்பதற்காக இஸ்லாமிய கலிமா வசனத்தை ஓத சொன்னார்கள்.[18] சில இந்து ஆண்கள் விருத்தசேதனம் செய்யப்படாமல் இருப்பதை சரிபார்க்க கட்டாயப்படுத்தி கால்சட்டைகளை அகற்றச் சொல்லி, பின்னர் நெருக்கமான தூரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[[19][20] போராளிகள் சில இந்து பெண்களிடம், அவர்களின் ஆண்கள் கொல்லப்பட்ட கொடூரத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைப்பதற்காக அவர்கள் உயிர் விடப்பட்டதாக கூறினர்.[21]

உயிரிழப்புகள்

மேலதிகத் தகவல்கள் நாடு, இறப்பு ...

இந்தத் தாக்குதலில் குறைந்தது 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 இந்திய சுற்றுலாப் பயணிகள், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு உள்ளூர்வாசிகள், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.[22][23]

குறைந்தது 20 பேர் காயமடைந்தனர்.[24][25] இறந்தவர்கள் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், ஹரியானா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலும் குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளனர்.[26][27][28] உயிரிழந்தவர்களில் 26 வயது இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும், புலனாய்வுப் பணியக அதிகாரி ஒருவரும் அடங்குவர்.[29][30]

Remove ads

பொறுப்பு

இத்தாக்குதலுக்கு பாக்கித்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா[31] ஹிஸ்புல் முஜாஹிதீன் [10] ஆகியவற்றின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.[32]இது 85,000-இற்கும் மேற்பட்ட காஷ்மீரி அல்லாதவர்களின் குடியேற்றமே " மக்கள்தொகை மாற்றத்திற்கு" வழிவகுத்ததாகக் குற்றஞ்சாட்டியது. [33][34]

பன்னாட்டு எதிர்வினைகள்

இத்தாக்குதலுக்கு பல நாடுகளிலிருந்து கண்டனமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் அறிக்கைகளும் வந்தன.[35][36][37] ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டன.[38][39][40]

இந்தத் தாக்குதலில் பாக்கிஸ்தான் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நிராகரித்து, "இவை அனைத்தும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை, இந்தியாவிற்கு எதிராக ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான மாநிலங்களில் புரட்சிகள் நடந்துள்ளன. நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில், இந்த எல்லா இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் நடந்துள்ளன" என்று கூறினார்.[41][42]

இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள சிங்கப்பூர், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாகக் கூறியது.[43]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads