சின்சோ அபே

யப்பானின் முன்னாள் பிரதமர் From Wikipedia, the free encyclopedia

சின்சோ அபே
Remove ads

ஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo) (21 செப்டம்பர் 1954 - 8 சூலை 2022) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[1] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.

விரைவான உண்மைகள் சின்சோ அபேShinzo Abe, சப்பான் பிரதமர் ...

இவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[2]

Remove ads

மீண்டும் பிரதமர் பதவியில்

திசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

ஆரம்ப வாழ்க்கை

அபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார்[4]. 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.[5]

Remove ads

இறப்பு

8 சூலை 2022 அன்று காலை தோக்கியோவிலிருந்து தெற்கில் 300 மைல் தொலைவில் உள்ள தெற்கு நாராவில் ஒரு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தாராளவாத மக்களாட்சி கட்சியின் கேய் சட்டோவுக்காக பேசிக்கொண்டிருந்த போது 41 வயதுடைய நாட்டு துப்பாக்கி மூலம் முன்னாள் இராணுவ வீரர் யமகாமியால் உள்ளூர் நேரம் 11.30இக்கு இருமுறை சுடப்பட்டார்.[6] அதிக இரத்த இழப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.[7]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads