யோசிகிதே சூகா

From Wikipedia, the free encyclopedia

யோசிகிதே சூகா
Remove ads

யோசிகிடே சூகா (Yoshihide Suga; பிறப்பு: 6 திசம்பர் 1948}} சப்பானிய அரசியல்வாதி ஆவார். இவர் 2020 செப்டம்பர் 16 இல் சப்பானியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் யோசிகிதே சூகாYoshihide Suga, சப்பானியப் பிரதமர் ...

இளங்கலைச் சட்டம் பட்டம் பெற்ற யோசிகிடே சூகா 1975 இல் அரசியலில் இறங்கினார். 1987 இல் யோக்கோகாமா மாநகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1996 பொதுத் தேர்தலில் கனகாவா தொகுதியில் லிபரல் சனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

சப்பானிய நாடாளுமன்றத்தில், சூகா 2006 ஆம் ஆண்டில் உட்துறை மற்றும் தகவல்தொடர்பு அமைச்சராகப் நியமிக்கப்பட்டார். 2012 இல் அமைச்சரவையின் தலைமைச் செயலாளரானார்.[2] 2020 செப்டம்பரில், பிரதமர் சின்சோ அபே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, சூகா ஆளும் லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 செப்டம்பர் 16 இல் இவர் புதிய பிரதமராக நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டார். சப்பானியப் பேரரசர் நருஹித்தோ இவரது நியமனத்தை ஏற்றுக் கொண்டார்.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads