சிபாகிஜாலா மாவட்டம்
திரிபுராவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிபாகிஜாலா மாவட்டம், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் 8 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையிடம் விசால்கர் நகரம். இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் இருந்து 2012 ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது.[1][2] இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண்மை இரப்பர் தோட்டகள் ஆகும். இம்மாவட்டத்தில் சிபாகிஜாலா காட்டுயிர் சரணாலயம் உள்ளது.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
1043.04 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் சோனாமுரா, பிஷால்கர், ஜம்புய்ஜாலா என 3 வருவாய் வட்டங்களும், 7 ஊராடசி ஒன்றியங்களும், 169 கிராம ஊராட்சிகளும், 2 நகராட்சிகளும், 1 பேரூராட்சியும் கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 5,42,731 ஆகும்.[3] சராசரி எழுத்தறிவு 98% ஆகும்.[4]
அரசியல்
இந்த மாவட்டம் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[5].
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads