சிமோன் சகாகுச்சி

From Wikipedia, the free encyclopedia

சிமோன் சகாகுச்சி
Remove ads

சிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) (பிறப்பு சனவரி 19, 1951) என்பவர் சப்பானைச் சேர்ந்த நோயெதிர்ப்பு வல்லுநரும் ஓசக்கா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரும் 2025 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை வென்றவரும் ஆவார்.[1][2] இவர் ஒழுங்குமுறை டி உயிரணுக்களைக் கண்டுபிடித்ததற்காகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தில் இவற்றின் பங்கை விவரித்தற்காகவும் மிகவும் பெயர்பெற்றவர். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய், தன்னுடல் தாக்க நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. சகாகுச்சிக்கு 2025இல் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனை இவர் அமெரிக்காவின் மேரி எ. புரன்கோவுடனும், இராம்சுடெலுடனும் இணைந்து பெற்றுகொள்கிறார்.

விரைவான உண்மைகள் சிமோன் சகாகுச்சி Shimon Sakaguchi 坂口 志文, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை வரலாறு

சகாகுச்சி சப்பானின் சிகா மாகாணத்தில் பிறந்து கியோத்தோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளார். 2015ஆம் ஆண்டில், தாம்சன் ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் , உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெறக்கூடியவர்களில் சிமோன் சகாகுச்சியையும் சேர்த்திருந்தது. அக்டோபர் 6, 2025 அன்று, மேரி இ. பிரன்கோவ் மற்றும் பிரெட் இராம்சுடெல் ஆகியோருடன் சேர்ந்து, இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.[3] இந்தப் பரிசு இவரின் புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.

Remove ads

விருதுகளும் அங்கீகாரமும்

  • 2004: வில்லியம் பி. கோலி விருது[4]
  • 2008: கீயோ மருத்துவ அறிவியல் பரிசு[5]
  • 2009: கௌரவப் பதக்கங்கள் (சப்பான்), ஊதா நிற நாடா[6]
  • 2011: அசாகி பரிசு[7]
  • 2012: தேசிய அறிவியல் அகாதமியின் வெளிநாட்டு கூட்டு ஆய்வு விருது[8]
  • 2015: சுனிச்சி கலாச்சார விருது
  • 2015: கெய்ர்ட்னர் அறக்கட்டளை பன்னாட்டு விருது [9].
  • 2016, 2018, 2021: ஆசிய விஞ்ஞானி 100, ஆசிய அறிவியலாளர்[10]
  • 2017: கிராஃபோர்டு பரிசு
  • 2017: கலாச்சார சிறப்பு மிக்க நபர்
  • 2017: மோமோஃபுகு ஆண்டோ பரிசு[11]
  • 2019: கலாச்சார ஒழுங்கு
  • 2020: பால் எர்லிச் மற்றும் லுட்விக் டார்ம்ஸ்டெட்டர் பரிசு[12]
  • 2020: இராபர்ட் கோச் பரிசு[13]
  • 2025: உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads