சியன்னா நகர கத்ரீன்

From Wikipedia, the free encyclopedia

சியன்னா நகர கத்ரீன்
Remove ads

சியன்னா நகர புனித கத்ரீன் (25 மார்ச் 1347, சியன்னா - 29 ஏப்ரல் 1380, உரோம்) ஒரு தொமினிக்கன் மூன்றாம் சபையின் உறுப்பினரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் அவிஞ்ஞோன் நகரில் தங்கியிருந்த திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி உரோமை நகருக்குத் திரும்பிச் செல்ல மிக முக்கிய காரணியாய் இருந்தார். 1970-இல் இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார். அசிசியின் புனித பிரான்சிசோடு இவரும் இத்தாலியின் பாதுகாவலராக கருதப்படுகின்றார்.

விரைவான உண்மைகள் சியன்னா நகர புனித கத்ரீன், கன்னியர்; மறைவல்லுநர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

Thumb
சியன்னா நகரில் உள்ள கத்ரீனின் வீடு

இவரின் இயற்பெயர் கத்ரோனா பெனின்கசா. இவர் இத்தாலியில் உள்ள சியன்னா என்னும் ஊரில், கியாகோமோ டி பெனின்கசாவுக்கும், லாப்பா பியகென்டியுக்கும் பிறந்தவர்.[1] இவர் பிறந்த வருடமான 1347-இல் கறுப்புச் சாவினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.[2]

கத்ரீனுக்கு ஐந்து அல்லது ஆறு அகவையின் போது முதல் காட்சி கிடைத்தது. அதில் இயேசு தன்னை ஆசிர்வதித்தார் எனவும், தன்னைப் பார்த்து சிரித்தார் எனவும். இக்காட்சியின் முடிவில் பரவச நிலையை அடைந்தார் எனவும் கூறியுள்ளார். ஏழு வயதில் இவர் கற்பு வார்த்தைப்பாடை அளித்தார்.

இவரின் மூத்த சகோதரியின் மறைவுக்கு பின்னர், மூத்த சகோதரியின் கணவரை மணக்க இவரின் பெற்றோர், இவரைகட்டாயப்படுத்தினர். இதனால் தன் பெற்றோர் மனம் மாறும் வரை உண்ணா நோன்பிருந்தார். அப்போது தன் அழகை குறைக்க தன் நீண்ட கூந்தலை வெட்டினார். புனித தோமினிக் அவரின் கனவில் தோன்றி அவரைத் தேற்றினார்.

கத்ரீன் தொமினிக்கன் சபையில் சேர்ந்தார். இதனை அச்சபை உறுப்பினர்கள் பலர் எதிர்த்தனர். ஏனெனில் அதுவரை விதவைகள் மட்டுமே அச்சபையில் சேர அனுமதி இருந்தது.

Thumb
"கத்ரீனின் ஆன்ம நண்மை. ஓவியர்: மிரான்செஸ்கோ பிரிசி

1366-இல் அவருக்கு கிடைத்த பரவச நிலையில் இயேசு தன்னை ஆன்மீக முறையில் மணந்து கொண்டதாக இவர் நம்பினார். அப்போது கிறிஸ்து இவரை, மறைந்த வாழ்வினை விடுத்து, பொது வாழ்க்கைக்கு போக சொன்னதாக இவர் தன் ஆன்ம வழிகாட்டியிடம் கூறியுள்ளார். இவர் நோயுற்றோருக்கு உதவினார். இவரின் தொண்டு உள்ளம் சிலரைக் கவர்ந்ததால், மேலும் சிலரும் தொண்டு புரிவதில் இவரோடு இணைந்தனர். இதனால் 1374-இல் தொமினிக்கன் சபைத் தலைவர்களால் பிளாரன்சு நகரில் தப்பறைக்கொள்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். இதன் பின் வடக்கு மற்றும் மத்திய இத்தாலியில் பயணம் செய்து, கடவுளை அன்பு செய்து புரட்சிபடைக்க மக்களை ஊக்குவித்தார்.[3]

1370-இன் முன் பகுதில் அவர் பலருக்கு கடிதம் எழுதினார்.[4] இக்கடிதங்களினால் இத்தாலியின் பெருங்குடியினர் மத்தியில் அமைதி பிறக்க அரும்பாடுபட்டார். இவர் திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியுடன் மிக நீண்ட கடித தொடர்பு வைத்திருந்தார். அதில் அவர் திருத்தந்தை நாடுகளின் மேலாளர்களையும், குருக்களையும் கண்டித்து வழிநடத்த அறிவுறுத்தினார்.

ஜூன் 1376-இல் இவர் தாமாகவே முன்வந்து திருத்தந்தை நாடுகளில் அமைதி கொணர முயன்றார். அது பயன் அளிக்காததால், திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரியை மீண்டும் அவிஞ்ஞோனிலிருந்து உரோமைக்கு 1377, ஜனவரியில் திரும்பி வரச் செய்தார். இத்திருத்தந்தையின் மறைவுக்குப் பின், யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு" அல்லது Western Schism of 1378). அப்போது இவர் திருத்தந்தை ஆறாம் அர்பனுக்கு துணை புரிய உரோம் நகரில் சென்று தங்கினார். அங்கேயே சாகும் வரை இருந்தார். இந்தப் பெரும் பிளவினால் ஏற்பட்ட துன்பங்களினால் அவர் சாகும் வரை வாடினார்.

புனித கத்ரீனின் கடிதங்கள் ஆரம்பகால டஸ்கான் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கடிதங்களுல் 300 கிடைத்து உள்ளது. திருத்தந்தைக்கான தனது கடிதங்களில், அவர் அடிக்கடி அவரை papa (இத்தாலிய மொழியில் "திருத்தந்தை") என்று அன்பாக குறிப்பிடப்படுகின்றார். ஆன்ம குருக்கள், கபுவாவின் ரேமண்ட், பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி அரசர்கள், கூலிப்படையினனான ஜான் ஹாக்வுட், நேபிள்ஸ் ராணி, மிலனின் விஸ்கோன்தி (Visconti) குடும்ப உறுப்பினர்கள், மற்றும் பலருக்கு இக்கடிதங்கள் எழுதப்பட்டன. அவரது கடிதங்கள் சுமார் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு எழுதப்பட்டது.

இவரின் The Dialogue of Divine Providence, என்னும் நூல், 1377 - 1378 இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகும். பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக கருதப்பட்டாலும், லத்தீன் மற்றும் இத்தாலிய மொழிகளை படிக்கும் திறன் இருந்ததாக அவரின் ஆன்ம குரு ரேமண்ட் கூறியுள்ளார், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மற்றவரால் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது என்றாலும் அவருக்கு எழுதத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Remove ads

இறப்பு

Thumb
Libro della divina dottrina, c. 1475
Thumb
சான் தோமினோ பேராலயம், சியன்னா. இங்கே சியன்னா நகர புனித கத்ரீனின் மீபொருட்களுள் சில வைக்கப்பட்டுள்ளது

புனித கத்ரீனின் முப்பத்தி மூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், 1380-ஆம் ஆண்டு இறந்தார்.

கத்ரீனின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரோமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறித்திய போது, தன்னால் உண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதி உறுவதாகவும் கூறினார் என்பர்.

மினெர்வா மேல் புனித மரியா கோவிலின் அருகில் உள்ள கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது.[5] இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.[6][7]

Thumb
மினெர்வா மேல் புனித மரியா கோவிலில் உள்ள கத்ரீனின் கல்லறை

திருத்தந்தை இரண்டாம் பயஸ் இவருக்கு 1461-இல் புனிதர் பட்டம் அளித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 29.[8]

மே 5, 1940 அன்று திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இத்தாலியின் பாதுகாவலராக அசிசியின் பிரான்சிசுவோடு சேர்த்து இவரையும் அறிவித்தார். திருத்தந்தை ஆறாம் பவுல் 1970-இல் இவரை மறைவல்லுநராக அறிவித்தார். அவிலாவின் புனித தெரேசாவுக்கு அடுத்தபடியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999-இல், இரண்டாம் யோவான் பவுல் இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.

கத்ரீனின் பசியற்ற நோயால் (Anorexia mirabilis) அவதிப்பட்டார் என்பர்.[9] இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசயதற்காகவும் பெரிதாக மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.

Remove ads

ஆதாரங்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads