சியரீசு (குறுங்கோள்)

சிறுகோள் From Wikipedia, the free encyclopedia

சியரீசு (குறுங்கோள்)
Remove ads

சியரீசு (Ceres /ˈsɪərz/;[7] சின்னம்: ⚳)[8] என்பது இதுவரை அறியப்பட்ட குறுங்கோளில் மிகப்பெரியது ஆகும். இது செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பட்டையில் அமைந்துள்ளது. இது 1801 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று இத்தாலிய வானியலாளர் கியூசெப்பே பியாத்சி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது அரை நூற்றாண்டு வரை எட்டாவது கோளாக விளங்கியது. சியரீசு எனும் உரோமானியப் பெண் கடவுளின் பெயரே இந்தக் குறுங்கோளுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை. முதலில் ஒரு சிறுகோள் என்று கருதப்பட்டு வந்த சியரீசு, மற்ற சிறுகோள்களை விட வேறுபட்டது என தெரியவந்தது. எனவே உலகளாவிய வானியல் ஒன்றியம் 2006ஆம் ஆண்டு சியரீசை குறுங்கோளாக வகைப்படுத்தியது.

விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads