சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற வளர்ச்சி இயக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற வளர்ச்சி இயக்கம் (Shyama Prasad Mukherji Rurban Mission), மறைந்த தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரால் இவ்வியக்கம் துவக்கப்பெற்றது. இவ்வியக்கம் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.[1]இந்த இயக்கத்தின் திட்டச் செயல்பாடுகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகள் மூலம் செயல்படுத்தப்படும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 21 பிப்ரவரி 2016 அன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள குருபாட் எனும் கிராமத்திலிருந்து இவ்வியக்கத்தை துவக்கி வைத்தார்.[2]

இவ்வியக்கம் ஊரகப் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நகர்புறங்களை ஒட்டிய 2840 ஊரகத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.[3] முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளில் 296 ஊரக-நகர்புறத் தொகுப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வியக்கம் செயல்படுகிறது.[4] இந்த தொகுப்பில் உள்ள ஒரு கிராமம் மதுரை மாநகரத்தை ஒட்டியுள்ள கோவில் பாப்பாகுடி கிராமமும் ஒன்றாகும். இக்கிராமத் தொகுப்பை நகர்புறம் அளவிற்கு மேம்படுத்த ரூபாய் 100 கோடி இந்த இயக்கம் ஒதுக்கியுள்ளது.[5] இந்தக் தொகுப்புகள் தேவையான வசதிகளுடன் பலப்படுத்தப்படும். இதற்காக அரசின் பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மூலம் வளங்களைத் திரட்ட முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு பொதுவான இடைவெளி நிதி (CGF) ஒதுக்கப்பட்டுள்ளது.[6]

Remove ads

இயக்கத்தின் பார்வை

சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற இயக்கம் (SPMRM) "கிராமப்புற சமூக வாழ்க்கையின் சாரத்தை பாதுகாத்து வளர்க்கும் கிராமங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் நகர்ப்புற வசதிகளுடன், கிராமப்புறங்களை மேம்படுத்துவதாகும்.

இயக்கத்தின் நோக்கம்

சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய ஊரக-நகர்புற இயக்கத்தின் (SPMRM) நோக்கம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது, அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊரக-நகர்புறத் தொகுப்புகளை உருவாக்குவது ஆகும்.

  1. எண்முறை (டிஜிட்டல்) கல்வியறிவு
  2. திறன் மேம்பாட்டு பயிற்சி
  3. கிராமங்களுக்கு இடையே சாலை இணைப்பு
  4. நடமாடும் சுகாதார பிரிவுகளை நிறுவுதல்
  5. அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்குதல்
  6. குடிமக்கள் சேவை மையங்கள்
  7. பொது போக்குவரத்து சேவைகள்
  8. வேளாண் செயலாக்கம்
  9. எரிவாயு இணைப்புகள்
  10. சுகாதார வசதிகள்
  11. வேளாண் பொருட்களின் சேமிப்பு கிடங்கள்
  12. குழாய் மூலம் குடிநீர் வழங்கல்
  13. கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல்
  14. திரவ மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துதல்
Remove ads

இயக்கத்தின் எதிர்பார்ப்புகள்

  • பொருளாதாரம், தொழில்நுட்பம், வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பானவைகளில் ஊரக-நகர்ப்புறங்ளில் வேறுபாடுகளை குறைத்தல். * கிராமப்புறங்களில் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுதல்.
  • பிராந்தியத்தின் வளர்ச்சியை பரப்புதல்.
  • கிராமப்புறங்களில் முதலீட்டை ஈர்ப்பது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads