ஜலந்தர்

From Wikipedia, the free encyclopedia

ஜலந்தர்map
Remove ads

ஜலந்தர் (Jalandhar, பஞ்சாபி மொழி: ਜਲੰਧਰ, இந்தி: जलंधर), என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊர். இது முன்னர் ஜுலுந்தர் என அழைக்கப்பட்டது. நகரப் பகுதியுள் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களும் நகரைச் சுற்றியுள்ள இடங்களில் மேலும் ஒரு மில்லியன் மக்களும் வாழ்கின்றனர்.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

ஜலந்தர் நகரம் தில்லியில் இருந்து 375 கி.மீ. தூரத்திலும், சண்டிகரில் இருந்து 142 கி.மீ. தூரத்திலும் அம்ரித்சரில் இருந்து 90 கி.மீ. தூரத்திலும் அமைந்திருக்கிறது. "ஜலந்தர்" என்ற பெயர் ஜாலந்தரா என்ற மன்னனின் பெயரில் இருந்து உருவானது. இவன் நீரில் வாழ்ந்ததாக ஐதீகம். "ஜல்" என்பது நீரையும், அந்தர் என்பது "உள்ளே" என்பதும் பொருள். ஜலந்தர் பஞ்சாபின் தலைநகராக 1953ம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் சண்டிகர் தலைநகராக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த போது இதன் பெயர் ஜுலுந்தர் ஆகும்.

Remove ads

மக்கள்

2001 ஆம் ஆண்டு தரவுகளின் படி[3] ஜலந்தரின் மக்கள் தொகை 701,223. இவர்களில் 54 விழுக்காட்டினர் ஆண்கள். 74 விழுக்காட்டினர் படிப்பறிவுள்ளோர். 10 விழுக்காட்டினர் 6 வயதிற்கும் குறைவானோர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads