வட கொரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.
Remove ads
வரலாறு
- கி.மு. 2333 ல் கொஜோசியோன் டாங் (Gojoseon Dangun) மூலம் முதல் கொரிய அரசு நிறுவப்பட்டது. வடக்கு கொரிய தீபகற்பம் மற்றும் மஞ்சூரியா பகுதிகள் வரை விரிவடைந்தது.இதைப் பற்றிய குறிப்புகள் கி.மு. 7 ஆம் நூற்றாண்டுகளில் சீன வரலாற்றுக் குறிப்புகளில் கூறப்படுகிறது.
- சீன ஹன் பாரம்பரியத்துடன் ஏற்பட்ட பல மோதல்களை அடுத்து கொஜோசியோன் அரசு சிதைந்தது.கொரியா வடக்கில் கோகுர்யோ, மற்றும் பெக்ஜ் மற்றும் தெற்கில் சில்லா ஆகிய மூன்று அரசுகளாகப் பிரிவடைந்தது.
- 372 ல் கோகுர்யோ அரசின் அதிகாரப்பூர்வ மதமாகப் புத்த மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் சீனாவுடன் பல யுத்தங்கள் மற்றும் சீன படையெடுப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்தது.
- 7 ஆம் நூற்றாண்டில் உள்நாட்டு வாரிசுப் போர்களால் வீழ்ச்சியடைந்தது
- 676 ல் ஒருங்கிணைந்த சில்லா நாட்டின் ஆட்சியின் கீழ் மற்ற நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டது.இக்காலத்தில் கொரியா மற்றும் சீனா இடையில் மிகவும் அமைதியான உறவு இருந்தது. இது 7-10 வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் வரை நீடித்தது.
- 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு மூலம் இது மிகவும் பாதிக்கப்பட்டது.1388 ல் மங்கோலியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின்னர் ஜோசியான் வம்சம் நிலைபெற்றது.
- 1394 ல் ஜோசியான் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை அரசியல் பிரச்சனைகளைத் தொடர்ந்து இதன் தலைநகரம் தெற்கு ஹான்யாங்கிற்கு (தற்கால சியோல்) மாற்றப்பட்டது.
- 1592–1598 வரையிலான காலகட்டத்தில் கொரியாவை கைப்பற்றும் எண்ணத்தில் இரண்டு முறை ஜப்பான் படையெடுபை முறியடித்தது.
- 17-19 நூற்றாண்டுகளில் சீனாவின் சார்ந்த தன்னிச்சையான நாடாக மாறியது.
- 1871 இல் காங்வா தீவில் அமெரிக்கப் படைகளுடன் ஏற்பட்டபோரில் 243 கொரிய வீரர்கள் கொல்லப்பட்ட பின் கொரியா ஜப்பான் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 1910 ல் ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொரியா வந்தது.
- இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஜப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது
- 1948 ல் வட மற்றும் தென் கொரியாக்கள் பிரிக்கப்பட்டன.
- 1950 ல் கொரிய போர் ஏற்பட்டது 1953 ஆம் ஆண்டு ஒரு போர் நிறுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் இவ்விரு நாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
சமயம்
இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றனவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. 64.3 விழுக்காட்டினர் மதமற்றவர்களாகவும் 16 விழுக்காட்டினர் கொரிய சாமனிசம் என்ற சமயத்தையும் 13.5 விழுக்காட்டினர் சோண்டோயிசம் என்ற சமயத்தையும் 4.5 விழுக்காட்டினர் புத்த மதத்தையும் 1.7 விழுக்காட்டினர் கிறித்தவ சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மத உரிமைகள் மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன இருப்பினும் வட கொரிய அரசு மதத்தை ஊக்குவிப்பதில்லை. வட கொரிய அரசு ஒரு நாத்திக அரசாக உள்ளது. வட கொரியாவில் மத தண்டனைகள் உள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியது.
மொழி
கொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
Remove ads
நிர்வாக அலகுகள்
வட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
- மாகாணங்கள்
- சஹாங்-டூ
- வட ஹாம்கயாங்
- தெற்கு ஹாம்கயாங்
- வடக்கு க்வாங்கே
- தெற்கு க்வாங்கே
- காங்வோன்-டூ
- வடக்கு பியாங்கன்
- தெற்கு பியாங்கன்
- ரெயாங்கங்-டூ
- பிரிவுகள்
- கெசாங் தொழில் மண்டலம்
- கும்காங்க்சன் சுற்றுலா மண்டலம்
- சின்நியு சிறப்பு மண்டலம்
நேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள்
- பியாங்யாங்
- ராஸன்
முக்கிய நகரங்கள்
- சின்நியுஜு]]
- கெசாங்
- நம்போ
- சோங்ஜின்
- வான்சன்
- சரிவான்
- ஹவுர்யோங்
- ஹம்ஹங்
- ஹேஜு
- காங்க்ஜி
- ஹெய்சான்
- கிம்சியாக்
- காங்க்சோ
Remove ads
வெளி இணைப்புகள்
- DPRK Database - வட கொரியா பற்றி (ஆங்கில மொழியில்)
- CIA உலகத் தரவுகள் பரணிடப்பட்டது 2020-05-18 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
- US காங்கிரஸ் நூலகம்(ஆங்கில மொழியில்)
- வட கொரியா பற்றிய விவரணம் பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்(ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads