சிராகூசு, நியூ யோர்க்

From Wikipedia, the free encyclopedia

சிராகூசு, நியூ யோர்க்
Remove ads

சிராகூசு (Syracuse, மாற்று ஒலிப்பு: சிரக்கியூஸ், locally /ˈsɛrəkjuːs/) ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தில் ஓணோன்டாகா மாவட்டத்தில் உள்ள நகரமாகும். இது நியூ யோர்க் மாநிலத்தில் நான்காவது பெரிய நகரமாகும்.[1] 2010 கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள்தொகை 145,170 ஆகவும் இதனை உள்ளடக்கிய சிராகூசு பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 732,117 ஆகவும் இருந்தது. மில்லியனுக்கும் கூடுதலான குடியிருப்புகளுடன் கூடிய மைய நியூயோர்க் வட்டாரத்தில் இது பொருளாதாரம் மற்றும் கல்விக்கான அச்சாக விளங்குகின்றது. இங்கு ஓணோன்டாகா கலந்தாய்வு வளாகம், எம்பயர் எக்ஸ்போ மையம் போன்ற கலந்தாய்வுக் கூடங்கள் நிறைந்துள்ளது. இதற்கு கிரேக்கத்திலுள்ள சிராகூசு (தற்போது இத்தாலியத் தீவான சிசிலியின் கிழக்குக் கடலோரத்தில் உள்ளது) நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சிராகூசு, நியூ யோர்க், Country ...

இந்த நகரம் துவக்கத்தில் ஈரி கால்வாய் மற்றும் அதன் கிளைக் கால்வாய்களுக்கிடையேயான பண்டமாற்றிடமாக இருந்தது; பின்னர் தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கப்பட்ட பிறகும் முக்கிய சந்திப்பாக விளங்கியது. இன்று மாநிலங்களிடை நெடுஞ்சாலை 81, மற்றும் 90 குறுக்கிடும் சந்திப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சிராகூசு ஹேன்காக் பன்னாடு வானூர்தி நிலையம் வட்டாரத்தில் மிகப்பெரும் வானூர்தி நிலையமாக உள்ளது. இங்கு முதன்மை ஆய்வுப் பல்கலைக்கழகமான சிரக்கியூஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தவிரவும் பல சிறிய கல்லூரிகளும் தொழில்முறைப் பள்ளிகளும் அமைந்துள்ளன. 2010இல் ஃபோர்ப்ஸ் இதழ் குடும்பம் நடத்த ஐக்கிய அமெரிக்காவின் முதல் 10 இடங்களில் சிராகூசை 4வதாக மதிப்பிட்டுள்ளது.[2]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads