சிறீகாந்த் (தெலுங்கு நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

சிறீகாந்த் (தெலுங்கு நடிகர்)
Remove ads

மேகா சிறீகாந்த் (Meka Srikanth) (பிறப்பு 23 மார்ச் 1968) இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தெலுங்குத் திரையுலகில் முக்கியமாக படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். இவர் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்க கட்டத்தில் இருந்து 120க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றினார். இவர் ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். 2004ஆம் ஆண்டு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற சுவராபிசேகம், 2011 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட விரோதி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் நவம்பர் 28, 2011 அன்று இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடலைக் கொண்டிருந்தது.[1]

விரைவான உண்மைகள் சிறீகாந்த், பிறப்பு ...

எஸ். வி. கிருட்டிணா ரெட்டி, கிருட்டிண வம்சி, ஜெயந்த் சி. பராஞ்சி, ஜி. நீலகண்ட ரெட்டி, இ. வீ. வெ. சத்யநாராயணா, கே. விஸ்வநாத் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த வராசுடு, வினோதம், எகிர் பாவூராமா, ஆகாவானம், மா நானகி பெல்லி, கட்கம், சங்கர் தாதா எம்.பி.பி.எஸ், பெல்லம் ஓரெலித்தே, ஏமண்டோய் ஸ்ரீவாரு, சேமம்கா வெல்லி லாபங்கா ரண்டி, ஓ சீனாதானா, சங்கர் தாதா ஜிந்தாபாத், ஆபரேஷன் துரியோதனன், மகாத்மா, கோவிந்துடு அந்தரிவாடலே போன்ற ஒரு சில படங்கள் குறிப்பிடத்தக்கவை.[2][3]

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இவர், 1968 மார்ச் 23 அன்று இந்தியாவின் கர்நாடகாவின் கங்காவதியில் பிறந்தார்.[4] இவரது தந்தை மேகா பரமேசுவர ராவ் (1946 – 2020) ஆந்திராவின் கிருட்டிணா மாவட்டத்தின் மேகவரிபாலத்திலிருந்து கங்காவதிக்கு குடிபெயர்ந்த பணக்கார நில உரிமையாளாவார்.[5]

இவர், தார்வாடு, கர்நாடக பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்து, திரைப்படத் தொழிலைத் தொடர சென்னைக்கு வந்தார்.[4]

தொழில்

1990 ஆம் ஆண்டில், மது திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து, நடிப்பில் ஓராண்டு படிப்பை முடித்தார்.[4] இவரது முதல் படம் பீப்பிள்ஸ் என்கவுண்டர் 1991 இல் வெளியிடப்பட்டது. பின்னர் இவர் ஆரம்பத் திரைப்படங்களில் எதிர்மறை வேடங்களிலும், துணைக் கலைஞராகவும் சிறிய வேடங்களில் நடித்தார். ஒன் பை டூ படத்தின் மூலம் ஒரு முன்னணி நடிகரானார்.[6] இவர் 100க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னணி நடிகராக இவரது முதல் வெற்றி படம் தாஜ்மஹால், 25 மே 1995 இல் வெளியிடப்பட்டது.

Remove ads

சொந்த வாழ்க்கை

இவர், 1997 சனவரி 20 அன்று நடிகை சிவரஞ்சனியை மணந்தார். இவர்களுக்கு ரோசன், ரோகன் என்ற இரு மகன்களும், மேதா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது ஐதராபாத்தின் யூபிளி இல்சில் வசித்து வருகிறார்.[7][8]

விருதுகள்

  • "மகாத்மா படத்திற்காக நந்தி சிறப்பு நடுவர் விருது [9]
  • சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் படத்திற்காக பிலிம்பேர் சிறந்த துணை நடிகருக்கான விருது [10]
  • சரியோனோடு படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான சியாமா விருது (தெலுங்கு)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads