சிறீதர் பிச்சையப்பா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீதர் பிச்சையப்பா (ஸ்ரீதர் பிச்சையப்பா, ஒக்டோபர் 20, 1962 - பெப்ரவரி 20, 2010) இலங்கையின் பிரபலமான நாடகக் கலைஞர். ஏராளமான வானொலி, மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி நடித்தவர். அத்துடன் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், எழுத்தாளர், 'மிமிக்ரி', மற்றும் ஓவியம் எனப் பல கலைத்துறைகளில் ஈடுபட்டவர்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
நாடகக் கலைஞரான டி. வி. பிச்சையப்பாவின் மகனான சிறீதர் 1962ம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனை கதிரேசன் வீதி இல்லத்தில் பிறந்தார். கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் கல்வி கற்றவர். தமது சிறுவயதில் இலங்கை வானொலியில் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி மூலம் சிறுவர் நாடகங்களில் பிரபலமாகிப் பின்னர் பாடகராக கலையுலகிற்கு பிரவேசித்தார். அப்சராஸ், ரங்கீலாஸ் போன்ற இலங்கையின் பிரபல இன்னிசைக்குழுக்களின் பிரதானமான பாடகராகவும் ஒரு மேடை அறிவிப்பாளராகவும் திகழ்ந்திருக்கின்றார்.
நவீன ஒவியத்தை வரைவதில் கொழும்பு மாவட்டத்தில் அவர் முன்னோடியாகவும் திகழ்ந்துள்ளார். அத்துடன் கவிதை எழுதுவதிலும் திறமை படைத்தவர். வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என்று தனது நடிப்புத்திறனை பல வழிகளில் இவர் பல்லூடகங்களூடாக வெளிப்படுத்தினார். சிங்கள தொலைக்காட்சி நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார். இலங்கையின் ஈழத்தவர் கலையம்சத்தை தென்னிந்திய கலைத்துறையுடன் ஒப்பிட்டுக் கூறும் அளவுக்கு தொண்ணூறுகளில் தென்னிந்திய திரையுலகின் பின்னணியில் ஈழத்துப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார்.
பல்கலைத் தென்றல் என அழைக்கப்பட்ட சிறீதர் கிழக்கு மாகாணக் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது குண்டு வெடிப்பில் சிக்கி ஒரு கண்ணை இழந்தார்.
Remove ads
வெளி இணைப்புகள்
- பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார் பரணிடப்பட்டது 2010-02-23 at the வந்தவழி இயந்திரம், வீரகேசரி, பெப்ரவரி 20, 2010
- ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார், தினகரன், பெப்ரவரி 21, 2010
- ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் ஒரு நேர்காணல்
- ஸ்ரீதர் பிச்சையப்பா நினைவாக [தொடர்பிழந்த இணைப்பு], காணொளி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads