சிறீநகர், உத்தரகண்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான மற்றொரு ஸ்ரீநகருடன் குழப்பமடையக்கூடாது
சிறீநகர் (Srinagar) என்பது இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பௌரி கர்வால் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி வாரியமாகும்.
Remove ads
நிலவியல்
சிறீநகர் 30.22 ° வடக்கிலும், 78.78 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [1] அலக்நந்தா ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள இந்த ஊர் சராசரியாக 560 மீட்டர் (1,837 அடி ) உயரத்தில் உள்ளது. இது கர்வால் மலைப்பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமாகும். ரிஷிகேசுவிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 58 ன் மூலம் சிறீநகரை அடையலாம். சிறீநகர் ரிசிகேசிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது. இது உத்தரகண்ட் சமவெளிகளில் உள்ள கடைசி நகரமாகவும், மலைகள் தொடங்கும் இடமாகவும் உள்ளது. கோத்வாரா வழியாகவும் சிறீநகரை அடையலாம். கோத்வாராவிலிருந்து சிறீநகரை அடைய அதிகபட்சம் 5 மணி நேரம் ஆகும்.

Remove ads
புள்ளி விவரங்கள்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிறீநகரின் மக்கள் தொகை 20,115 பேராகும். ஆண்கள் 52 சதவீதமும், பெண்கள் 48 சதவீதமும் இருக்கின்றனர். கர்வால் மலைகளில் சிறீநகர் மிகப்பெரிய நகரமாகும்.
வரலாறு

சிறீநகர், கர்வால் இராச்சியத்தின் தலைநகரான பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. ராஜா அஜய் பால் பல்வேறு தலைவர்களையும் பகுதிகளையும் ஒன்றிணைத்தார். கி.பி 1506-1512ன் போது சிறிய மாவட்டங்களைக் கொண்டு கர்வால் இராச்சியம் நிறுவப்பட்டு, சந்த்பூர் பகுதியிலிருந்து தலைநகரை சிறீநகர் இடத்திற்கு மாற்றப்பட்டது.
கூர்காக்கள் நேபாளி மன்னரை தோற்கடித்து காத்மாண்டுவை ஆக்கிரமித்தனர். இது அவர்களுக்கு தைரியம் அளித்தது, அவர்கள் மேற்கு நோக்கி திரும்பி 1803இல் குமாவோன் மற்றும் கர்வால் ஆகிய பகுதிகளைத் தாக்கினர். கர்வாலைச் சேர்ந்த ராஜா பிரதியுமான் ஷா 1804 சனவரியில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். சிறீநகர் 1806 முதல் 1815 வரை கூர்கா ஆட்சியின் கீழ் இருந்தது. கூர்காக்கள் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறீநகர் பிரித்தனியர்களின் ஒரு பகுதியாக மாறியது . [2]
கோஹ்னா ஏரி அணை வெடிப்பில் பழைய சிறீநகர் நகரம் அழிக்கப்பட்டது. இது நகரத்தின் பழைய நினைவுச்சின்னங்கள் அனைத்தையும் அழித்தது. இன்று இந்த நகரம் ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் கல்வி மையமாக உள்ளது. மத்திய கர்வாலில் மிதமான உயரத்தில் அமைந்துள்ளதால், இது மலைகளில் உள்ள ஒரு முக்கியமான பள்ளத்தாக்கு சந்தையாகும். இங்கு ஏராளமான கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான இடங்கள் உள்ளன.
காலநிலை
கோடைகாலத்தில் கர்வால் மலைப்பகுதியில் வெப்பமான இடமாக உள்ளது. ஏனெனில் சிறீநகர், 560 மீட்டர் உயரத்தில் உள்ளது. மே முதல் ஜூலை வரை சில நாட்களில் வெப்பநிலை 45 ° C ஐ அடைகிறது. இது குளிர்ந்த குளிர்காலங்களையும் கொண்டுள்ளது. திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் வெப்பநிலை 2 ° C ஆக குறையும்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads