சிறீநகர் குடியிருப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறீநகர் குடியிருப்பு (Srinagar Colony) இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள முக்கியமான வணிக மற்றும் குடியிருப்பு பகுதியாகும்.[1] இது 2009இல் பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் வார்டு எண் 104ஐ உருவாக்கியது.[2]
இப்பகுதி மாதப்பூருக்கு நெருக்கமாக இருப்பதால், பல பணிபுரியும் மென்பொருள் நிபுணர்களுடன், இது ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதியாக இருக்கிறது. அதிக மதிப்புள்ள குடியிருப்புகளும் உள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் வீட்டுமனைகளின் விலை இந்த பகுதியில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
Remove ads
வணிகப் பகுதி
இந்த புறநகரில் பல வங்கிகள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் போன்றவை உள்ளன. இந்தப் பகுதியை தங்கள் தளமாக மாற்றிய பல மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. ஐதராபாத்து சென்ட்ரல், பி.வி.ஆர் சினிமாஸ், பிக் பஜார் (பிக் சினிமாஸ்), சினிமாக்ஸ், ஜி.வி.கே ஒன் (ஐனாக்ஸ்) போன்ற பல வணிக வளாகங்களும், திரையரங்குகளும் 1 முதல் 2 கி.மீ தூரத்திற்குள் உள்ளன. அமீர்பேட் மிக அருகில் உள்ளது. இது ஒரு பெரிய வணிகப் பகுதியாகவும் உள்ளது.
Remove ads
குடியிருப்புப் பகுதி
தெலங்காணாவில், ஐதராபாத்தின் மேற்கே அமைந்துள்ள ஓர் ஆடம்பரமான புறநகர் பகுதியாகும். மூன்று படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடு ரூபாய் 60,000.00 வரை வாடகையுடன் இருக்கிறது. இப்பகுதியில் பெரும்பாலான கட்டிடம் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. சாலையில் சிறிய பூங்காக்கள் நிறைய அமைந்துள்ளன. கணபதி வளாகம் தொலைக்காட்சி நட்சத்திரங்களுக்கான மிகவும் பிரபலமான சந்திப்பு இடமாகும்.
போக்குவரத்து
தெலங்காணா மாநில போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகள் சிறீநகர் குடியிருப்பினை நகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இணைக்கின்றன. 'செட்வின் சேவை' எனப்படும் சிறு பேருந்து சேவையும் உள்ளது.[3] எம்.எம்.டி.எஸ் ரயில் நிலையம் பேகம்பேட்டையிலும், அருகிலுள்ள மெற்றோ நிலையம் யூசுப்குடாவிலும், அமீர்பேட்டையிலும் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads