சிறீமதி இந்திரா காந்தி கல்லூரி
தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி (Shrimati Indira Gandhi College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி 1984 ஆம் ஆண்டில் கே. சந்தனம் என்பவரால் நிறுவப்பட்டது, இது சத்திரம் பேருந்து நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ளது. இந்த கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1]
Remove ads
வரலாறு
இந்த கல்லூரி 1984 ஆம் ஆண்டில் கல்வியாளர் கே. சந்தனம் அவர்களால் 2 படிப்புகள் கொண்டதாக 10 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்காக பிரத்தியேகமாக நிறுவப்பட்ட மாநிலத்தின் முதல் இரண்டு கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக இந்த கல்லூரிக்கு முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டதுடன், கல்லூரி வளாகத்தில் இந்திரா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. [2]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads