சிறுநீரகக் கல்
சிறுநீர்த்தொகுதியில் உண்டாகும் திடமான பொருள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறுநீரகக் கல் (Kidney stone) அல்லது கல் சுளுக்கு என்பது ஒரு கிரிஸ்டலோபதி ஆகும், இதில் ஒரு திடமான பொருள் (சிறுநீரக கல்) சிறுநீர்த்தொகுதியில் உண்டாகிறது.[2] சிறுநீரக கற்கள் பொதுவாக சிறுநீரகத்தில் உருவாகி அது சிறுநீரில் செல்கிறது.[1] சிறிய கற்கள் அறிகுறிகளே தெரியாமல் கடந்து செல்லலும்.[1] ஆனால் ஒரு கல் 5 மில்லிமீட்டருக்கு (0.2 அங்குலம்) அதிகமாக வளர்ந்தால், அது சிறுநீர்க்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக இடுப்பு மற்றும் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படும்.[1][2] சிறுநீரகக் கல்லினால் சிறுநீரில் குருதி வருதல், வாந்தியெடுத்தல், வலிமிகுந்த சிறுநீர் கழிப்பு ஆகியவை ஏற்டலாம்.[1] சிறுநீரகக் கல் உள்ளவர்களில் பாதி பேருக்கு பத்து ஆண்டுகளுக்குள் மற்றொரு சிறுநீரகக் கல் வர வாய்ப்புள்ளது.[3]
Remove ads
சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகிறது
- பெரும்பாலான கற்கள் மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையால் உருவாகின்றன.[1] சிறுநீரில் அதிக கால்சியம் அளவு, உடற் பருமன், சில உணவுகள், சில மருந்துகள், சுண்ணாம்புத்தாது அளிக்கும் மருந்துக் கலவைகள், அதிபாராத்தைராய்டியம், கீல்வாதம் மற்றும் போதுமான நீர்மம் குடிக்காதது ஆகியவை இதன் காரணிகளில் அடங்கும்.[1][3] சிறுநீரில் கனிமங்கள் அதிக செறிவில் இருக்கும்போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன.[1] நோயறிதல் என்பது பொதுவாக அறிகுறிகள், சிறுநீர்ச் சோதனை மற்றும் மருத்துவப் படிமவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.[1] குருதிப் பரிசோதனைகளும் பயனுள்ளதாக இருக்கும்.[1] கற்கள் பொதுவாக அவற்றின் இருப்பிடத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன: நெஃப்ரோலிதியாசிஸ் (சிறுநீரகத்தில்), சிறுநீர்க்குழாய் அழற்சி (சிறுநீர்க்குழாயில்), சிஸ்டோலிதியாசிஸ் (சிறுநீர்ப்பையில்), அல்லது அவை எதனால் ஆனவை (கால்சியம் ஆக்சலேட்டு, யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட், சிஸ்டைன்).[1]
- மேலும் கி.மு. 600 ஆம் ஆண்டிலிருந்தே சிறுநீரகக் கற்கள், அவற்றை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையின் விளக்கங்களுடன் வரலாறு முழுவதும் மனிதர்களை பாதித்துள்ளன.[4] உலகளவில் 1% முதல் 15% வரையிலான மக்கள் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்படுகின்றனர்.[3][5] 2015 இல், 22.1 நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.[6] இதன் விளைவாக சுமார் 16,100 இறப்புகள் ஏற்பட்டன.[7] 1970களில் இருந்து மேற்கத்திய உலகில் இது மிகவும் பொதுவான ஒரு நோயாக உள்ளது.[3][8] பொதுவாக, இதனால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.[1][5] நோயின் பரவலும், பாதிப்பும் உலகளவில் உயர்ந்துவருகிறது. இது நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு சவாலாக உள்ளது. இந்த சூழலில், தொற்றுநோயியல் ஆய்வுகளானது உலகளவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோயின் சுமைகளை தெளிவுபடுத்துவதற்கும், சிறுநீரக கற்களின் வளர்ச்சிக்கும், ஆபத்துக்கான காரணிகளை அடையாளம் காண்பதற்கும் முயற்சி செய்கின்றன.[9]
Remove ads
சிறுநீரகக் கற்கள் வருவதற்கான காரணம்
- கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும், சிறுநீர் வெளியேறாமலும் இருப்பதன் மூலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகமானாலும் இப்பிரச்சினை ஏற்படலாம்.
- நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உணவுகளில் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். தேநீர் அதிகமாக உட்கொண்டால் சிறுநீரகக்கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகிறது.
- மேலும் நாம் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களாளும் அதிக அசைவ உணவை எடுத்துக் கொள்வதாலும் கூட சிறுநீரகக்கற்கள் ஏற்படலாம்.
Remove ads
சிகிச்சை முறை
- உணவில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவும், புயூரினின் அளவும் குறைவாகவே இருக்கவேண்டும். இத்துடன் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்தை அதிகம் சேர்த்துதுக் கொள்ளகூடாது. உணவு மூலமாக ஏற்கனவே உருவான கற்களை நீக்க இயலாது. ஆனால், புதியதாக கற்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சிறுநீரகக் கல் அறிகுறி அல்லது கல் சுளுக்கு அறிகுறிகள்
- மேலும் நமது உடலில் சிறுநீரகத்தில் கல் அடைப்பால் ஏற்படும் வலியை எளிதாக தெறிந்து கொள்ள நமது நாட்டு வைத்தியத்தின் முறையில் சிறுநீரக கல் வலி ஏற்பட்டவர்களின் தொப்புள் குழியில் சிறிது விளக்கெண்ணெயை விட்டு வலி இருக்கும் பகுதிகளான அடிவயிற்றிலும், இடுப்பிலும் நன்றாக தேய்த்து நீவிவிட்டு அடிவயிற்றில் தட்டி பார்த்து சிறுநீரக குழாயில் கல்லின் இருப்பு நிலையை வைத்தியரால் உறுதி செய்யபடுகிறது.
- அதன் பிறகு வைத்தியர் கையாளும் மருத்துவ பிரம்பை இரு முனையிலும் பிடித்து கொண்டு எண்ணெய் தேய்க்கபட்டவர் வயிற்றிலும் பின்புற இடுப்பிலும் மேலும் கீழூமாக உருட்டி நீவி நிராவி விடப்படும் போதே அடிவயிற்றிலும், இடுப்பிலும் எவ்விடத்தில் வலியின் பகுதி கண்டறியும் போதே வலியால் பாதிக்கப்பட்டவர் கூச்சலிடுவர்.
- அதன் பிறகே அந்த இடத்தில் வைத்தியர் கையாளும் பிரம்பை நேராக வைக்கும் போது அப்பிரம்பு கீழே விழாமல் நேர் நிலையாக நிற்கும் நிலையை கண்டே அந்த இடத்தில் சிறுநீரக கல் இருப்பதை உறுதி செய்து கண்டறியலாம்.
- இந்த சிறுநீரக கல் அடைப்பால் ஏற்படும் வலியின் அறிகுறியை பழைய நாட்டு வைத்திய முறையில் இவ்வாறு கையாளப்படுகிறது.
Remove ads
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்
- அகத்திக் கீரை, முருங்கை இலை, பால், தயிர், கசகசா பொடி, மீன், இறால், நண்டு, கேழ்வரகு, சோயா, எள்
பாஸ்பேட் அதிகம் காணப்படும் உணவுகள்
- தானிய வகைகள், கொட்டைகள், எண்ணெய் வித்துக்கள், கேரட், பால், பாலைச் சார்ந்த உணவுகள், முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள்.
ஆக்ஸலேட்
- கீரைவகைகள், டீ, காபி, கோகோ, சாக்லேட், பீட்ருட், முந்திரி, கருணைக்கிழங்கு, பீன்ஸ். நெல்லிக்காய், அத்திப்பழம், வெண்டைக்ககாய், பாதாம்.
பியூரின் அதிகம் உள்ள உணவு
- ஆட்டு ஈரல், மூளை, சிறுநீரகம், மீன், இறைச்சி சூப்
இவற்றையும் பார்க்கவும்
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads