சிறுநீரகத்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறுநீரகத்தி (Nephron) எனப்படுவது சிறுநீரகத்தின் அமைப்பிற்குரியதும், தொழிலுக்குரியதுமான அடிப்படை அலகாகும். இந்த சிறுநீரகத்தியே, குருதியை வடிகட்டுவதன் மூலமும், பின்னர் தேவையான பொருட்களை மீள உறிஞ்சி, தேவையற்றவற்றை கழிவாக அகற்றுவதன் மூலமும், உடலிலுள்ள நீரினதும், சோடியம் போன்ற கரையும் பதார்த்தங்களினதும் சமநிலையைப் பேணும் முக்கியமான தொழிலைச் செய்கின்றது. இந்த சிறுநீரகத்தியின் தொழில் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருப்பதுடன், அகச்சுரப்பித் தொகுதியினால் கட்டுப்படுத்தப்படுவதுமாக இருக்கின்றது[1]. சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone), அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல்) வளரூக்கி ஆல்டோஸ்டிரோன் (aldosterone), இணைகேடய வளரூக்கி போன்றவைகளினால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்பாடு உடைய சிறுநீரகத்திகள் கழிவுகளை வடித்து வெளியேற்றுவதன் மூலம் உடலிலுள்ள நீரின் அளவு, சோடியம் போன்ற அயனிகளின் அளவு, வளர்சிதைமாற்ற இடைநிலைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் சமநிலையைப் பேணுகின்றது. இதன் மூலம் குருதியின் அளவு, குருதி அழுத்தம், குருதியின் காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) என்பவற்றை ஒழுங்கமைக்கின்றது.
மனிதரில் ஒரு சாதாரண சிறுநீரகத்தில், 800,000 தொடக்கம் 1.5 மில்லியன்கள் வரையிலான சிறுநீரகத்திகள் உள்ளன.[2].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads