சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய அரசு சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்திய அமைப்பே சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம். இந்த ஆணையம் இதே பெயரில் அமைந்த சட்டத்தின் படி 1992 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.. இதன்படி இசுலாமியர், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகிய ஆறு சமுதாயத்தினரை சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகின்றனர்.[2][3] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஆறு சமூகங்களும் நாட்டின் மக்கள் தொகையில் 18.8% ஆகும்.[4]
”ஓர் அரசு அதன் அனைத்து சிறுபான்மை சமய, இன, மொழி மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாத்து, அவர்களின் அடையாளம் வளர வழிவகுக்க வேண்டும் ” என்ற ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்தையொட்டி இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது.[5]
Remove ads
அதிகாரங்கள்
இந்த ஆணையத்தின் அதிகாரங்கள்:[6]
- மைய, மாநில அரசுகளிடம் சிறுபான்மையினர் வளர்ச்சி குறித்த செயலாக்கம்
- சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை செயற்படுத்தப்படுகின்றனவா என்று கண்காணித்தல்
- சிறுபான்மையினர் நலன் தொடர்பாக மைய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்தல்
- சிறுபான்மையினர் தொடர்பாக எழும் புகார்களுக்கு தகுந்த துறையை அணுகி தகுந்த நடவடிக்கை எடுத்தல்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads