சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா) அல்லது சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் (Ministry of Minority Affairs), இந்திய அரசால் 2006 ஆம் ஆண்டின் ஜனவரி 29 அன்று ஏற்படுத்தப்பட்ட அமைச்சகம் ஆகும். இந்த அமைச்சகமே சிறுபான்மை மக்களின் நலன்களை காக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்திய சிறுபான்மையினருள் இசுலாமியர், சீக்கியர், கிறித்தவர், பௌத்தர், பார்சி மற்றும் சமணர் ஆகியோரும் அடக்கம்[1]
இதன் தற்போதைய மூத்த அமைச்சர் இசுமிருதி இரானி மற்றும் இணை அமைச்சர் ஜான் பர்லா ஆவார். மத்திய வக்ஃபு குழு இதன் கீழ் செயல்படுகிறது.
Remove ads
முன்னாள் அமைச்சர்கள்
Remove ads
நிறுவனங்கள்
- அரசியலமைப்புக்கு உட்பட்ட மற்றும் சட்டபூர்வமான நிறுவனங்கள்
- மத்திய வக்பு வாரியம் (இந்தியா) (CWC)
- சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா) (NCM)
- சிறுபான்மை மொழிகளுக்கான ஆணையாளர் [2]
- சுயநிதி அமைப்பு
- மௌலான ஆசாத் அறக்கட்டளை [3]
- பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்
- தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)
திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள்
- ஜியோ பார்சி - பார்சிகளின் மக்கள் தொகைக் குறைவைக் கட்டுப்படுத்தும் திட்டம் [4]
- நய் ரோஷினி - சிறுபான்மை சமூக பெண்களின் தலைமைத்துவம் மேம்பாடு திட்டம் [5]
- நய் மன்சில் - சிறுபான்மை சமூகங்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார திட்டம்[6]
- நய் உடான் - சிறுபான்மை சமூகங்களின் மாணவர்கள் முதல்நிலை போட்டி தேர்விகளில் வெற்றிப்பெறுவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டம் [7]
- சீக்கோ அவ்ர் கமோவ் - சிறுபான்மையினரின் திறன் மேம்பாட்டுக்கான திட்டம்[8]
- ஹமரி தரோஹார் - இந்திய கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த கருத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் திட்டம்[9]
- ப்ரி மெட்ரிக் உதவித்தொகை திட்டம் - சிறுபான்மை சமூக மாணவர்களைல் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்[10]
- போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் - சிறுபான்மை சமூக மாணவர்களில் பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டம்[11]
- சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவித்தொகை திட்டம்[12]
- சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டம் [13]
- படோ பர்தேஷ் - சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டம்[14]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads