சிலம்பாட்டம் (திரைப்படம்)
சக்தி சரவணன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிலம்பாட்டம் (2008) ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்குநராக அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படம்.[1] இதில் சிலம்பரசன் (அப்பா மற்றும் மகன்), சானா கான், சினேகா, பிரபு, நெடுமுடி வேணு, சந்தானம், பொண்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.
இத்திரைப்படம் டிசம்பர் 18, 2008ம் ஆண்டு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வணிகரீதியாக வெற்றி பெற்றதுடன் 100 நாட்கள் வரை படம் திரையானது. [2]
Remove ads
கதை
விச்சு (சிம்பு) தனது தாத்தாவின் (தாய்வழி) வளர்ப்பில் சாதுவான பூசாரியாக வளர்கிறார். தாத்தாவுடன் கோவிலில் அமைதியாக பணிபுரிகிறார். விச்சுவுக்கு ஒரே ஆறுதல் அவரது காதலி ஜானுவின் (சானா கான்) அன்பு. விச்சுவின் ஒரே நண்பன் சாமா (சந்தானம்).
ஒரு நாள், ஒரு பெரிய ரவுடிகும்பல் அப்பாவி நபர் ஒருவரை அடிப்பதை பார்க்கிறார். உடனே சென்று அவரை காப்பாற்றுகிறார். நன்றி சொல்லும் அவர் விச்சுவின் முகத்தை உற்றுப் பார்த்து திகைத்துப் போய், கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முத்துவேலை (பிரபு) சந்தித்து என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.
முத்துவேல் விடுதலையானதும் விச்சுவைச் சந்திக்கச் செல்கிறார். விச்சுவும் அவரது தாத்தாவும் சந்திக்கும் வேளையில் ரவுடி கும்பல் முத்துவேலை கொலை செய்ய வருகிறது. விச்சுவுக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே நிகழும் சண்டையில் விச்சு முத்துவேலை காப்பாற்றுகிறார். இதை பார்த்த விச்சுவின் தாத்தா அதிர்ச்சியடைகிறார். விச்சு முத்துவேலை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். இத்தனை நாளாக சாதுவாக வளர்த்துக்கொண்டிருந்த தாத்தா விச்சுவின் அப்பாவின் கதையை சொல்லத்துவங்குகிறார்.
தன்னுடைய முன்னோர்கள் ஏழைகளுக்குக் கொடுத்த நிலத்தை அபகரிக்க முயல்கிறார் பொன்வண்ணன். இதை எதிர்க்கும் முத்துவேல் (பிரபு) குடும்பத்துக்கும், வீரையன் (பொன்வண்ணன்) குடும்பத்துக்கும் கடும் மோதல் நிலவுகிறது. இந்த மோதலில் வீரையனின் மகன் இறக்கிறார். முத்துவேலின் தம்பி தமிழரசன் (தந்தை சிம்பு) தனது மகனைக் கொன்றதாக நினைக்கும் வீரையன் தன்னைத்தானே குத்திக்கொண்டு தமிழரசன் மீது பழிபோட்டுவிட்டு இறக்கிறார். நீதிமன்றத்தில் தமிழரசனைக்காப்பாற்ற, அவரைக்காதலித்த பிராமண குடும்பத்தைச்சேர்ந்த காயத்ரி (சினேகா) தன்னோடு இருந்ததை ஒப்புக்கொள்கிறார். இதன் மூலம் தன் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறார் காயத்ரி. அதன் பின்னால், காயத்ரியும் தமிழரசனும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
உண்மை தெரியாத வீரையனின் கடைசி மகன் துரை சிங்கம் (கிஷோர்), ஆத்திரத்தில் தமிழரசன் மற்றும் அவருடைய குடும்பம் மொத்தத்தையும் கொல்கிறார். அங்கிருந்து தப்பிச்செல்லும் காயத்ரி தன் தந்தை வீட்டில் விச்சுவை (மகன் சிம்பு) பெற்றெடுத்துவிட்டு இறக்கிறார். இதன் மூலம் தாத்தாவின் வீட்டில் வளரும் விச்சு தன் குடும்பத்தைக் கொன்ற துரை சிங்கத்தை பழி வாங்குகிறார்.
Remove ads
நடிகர்கள்
- சிலம்பரசன் - விச்சு (மகன்) மற்றும் தமிழரசன் (தந்தை)
- சானா கான் - ஜானு (விச்சுவின் காதலி)
- சினேகா - காயத்ரி (தமிழரசனின் மனைவி, விச்சுவின் தாய்)
- பிரபு - முத்துவேல் (தமிழரசனின் மூத்த அண்ணன், விச்சுவின் பெரியப்பா)
- சந்தானம் - குசு விடும் சாமா (பூசாரி, விச்சுவின் நண்பன்)
- நெடுமுடி வேணு - காயத்ரியின் தந்தை, விச்சுவின் தாத்தா
- பொன்வண்ணன் - வீரையன் (நிலத்தை அபகரிக்க முயல்பவர், துரைசிங்கத்தின் தந்தை)
- கிஷோர் - துரை சிங்கம் (வீரையனின் கடைசி மகன்)
- யுவராணி - துரை சிங்கத்தின் மனைவி
- கருணாஸ் - கிராமத்துக்காரர்
- விநாயகன் - தமிழரசனின் நெருங்கிய நண்பன்
- மனோபாலா - ஜானுவின் தந்தை
- நிரோஷா - ஜானுவின் தாய்
- எஸ். என். லட்சுமி - முத்துவேல் மற்றும் தமிழரசனின் பாட்டி
Remove ads
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "படத்தின் பிரமாத ப்ளஸ்கள் யுவன் - மதி. யுவனின் இளமைத் துள்ளலில் அத்தனை பாடல்களும் அசத்தல் ஸ்பெஷல். ஆக்ஷன் படத்துக்கான வேகமும் அழகுமாக மாய்ந்து மாய்ந்து உழைத்திருக்கிறது மதியின் கேமரா. ஆனால், எதிர்பார்ப்பைக் கிளப்பி, தமிழ்நாடே ஆடித் தீர்க்கும் 'பார்ட்டி' பாடலைக் காட்சிப்படுத்தியதில் சொதப்பிவிட்டார்கள்... மொத்தமாக சிலம்பாட்டத்தில் கம்பும் வம்பும்தான் அதிகம்!" என்று எழுதி 37100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads