சிவகளை
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவகளை (Sivagalai) என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், சிவகளை ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 30 கி.மீ., திருவைகுண்டத்திலிருந்து 10 கி.மீ. மற்றும் ஏரலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி நைனார்புரம், பறம்பு, பொட்டல், பராக்கிரமபாண்டி, மாங்கொட்டபுரம் மற்றும் ஆவாரங்காடு முதலிய கிராமங்கள் உள்ளன.
Remove ads
தொல்லியல் அகழாய்வுகள்
சிவகளையில் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல்களத்தை சிவகளையைச்சார்ந்த, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் மாணிக்கம் என்பரால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது சிவகளையில் 25 மே 2020 முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறது[1], இதற்கு தமிழக அரசு முதற்கட்ட அகழாய்விறௌகு ரூபாய் 58 இலட்சம் ஒதுக்கி அகழாய்வு நடைபெற்றது.தற்பொழுது இரண்டாம் கட்ட அகழாய்விற்கு ரூபாய் 34 இலட்சம் ஒதுக்கி சிவகளையை சுற்றியுள்ள ஒன்பது இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சிவகளையில் பழங்கால கல்வட்டங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.[2] இந்த தொல்லியல்களம் 2000 ஏக்கர் பரப்பளவில் சிவகளையை சுற்றி அமைந்துள்ளது.[3]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,139 வீடுகள் கொண்ட சிவகளை கிராமத்தில் மக்கள்தொகை 4,087 ஆகும். எழுத்தறிவு 86.53%, பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறைய 978 & 2 ஆகவுள்ளனர்.[4] தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இக்கிராமத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்துள்ள்து.
கோயில்கள்
சிவகளை கிராமத்தில் முத்துமாலை முப்பிடாரி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், உச்சினி மாகாளியம்மன் கோயில், பத்திரகாளி கோயில், வெயிலுகந்த அம்மன் கோயில், முத்துமாலை அம்மன்,நாராயணசுவாமி கோவில்,குளக்கரை பெருமாள், சிவனைந்த பெருமாள் கோயில், சுந்தர விநாயகர் கோவில்,அருள்மிகு முத்தாரம்மன் கோவில்,கொடிக்கால்பத்து சுடலைமாடசாமி கோயில், முனியசாமி கோவில், புஷ்கல தேவி சமேத பெரும்படையார் சாஸ்தா கோயில் மற்றும் இருளப்பசாமி சாமி கோயில்கள் உள்ளது.
கல்வி
சிவகளை கிராமத்தில் ஒரு மேனிலைப் பள்ளி இருக்கிறது. ஒரு நடுநிலைப்பள்ளியும் மற்றும் 4 துவக்கப்பள்ளிகளும் உள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads