சிவமகாபுராணம்
வியாசபுராணங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவ புராணம் (சமஸ்கிருதம்: शिव पुराण, சிவ புராணா) அல்லது சிவமகாபுராணம் (शिवमहापुराण) என்பது பதினெண் புராணங்களில் நான்காவது புராணமாகும். பதினென் புராணங்களின் வரிசையில் சிலர் சிவ புராணத்திற்கு பதிலாக வாயு புராணத்தினை சேர்க்கின்றார்கள். வியாச முனிவரால் இயற்றப்பட்ட பதினெட்டு மகா புராணங்களுள் சைவ சமய முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெருமையை உரைக்கும் புராணங்கள் சிவபுராணங்களாகும்[1]. இவை தாமச புராணம் என்றும் அறியப்படுகின்றன.
இந்த சிவபுராணங்கள் பத்து என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இப்புராணங்களை படிக்கத் தொடங்கிய பொழுதும், படித்து முடித்த பொழுதும் மாகேசுர பூசையை அவசியம் செய்ய வேண்டுமென ஆறுமுக நாவலர் தனது சைவ வினா விடை இரண்டாம் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். [2] ஆசாரியராவதற்கு சிவபுராணங்களை அறிந்திருக்க வேண்டுமெனவும் [3], சிவபுராணங்களை படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் உத்திராட்சத்தினை தரிக்க வேண்டுமெனவும் [4], சிவராத்தியன்று சிவபுராணங்களை படிக்க வேண்டுமெனவும் [5] ஆறுமுக நாவலர் கூறுகி்றார்.
Remove ads
புராண வரலாறு
நைமிசாரண்ணியம் எனும் வனத்தில் வசிக்கும் முனிவர்கள் ஒன்றிணைந்து, வருமான சூதமா முனிவரிடம் சிவபெருமானது பெருமைகளை கூறும் படி வேண்டினார்கள். சூதமா முனிவர் வியாஸ மகரிஷியின் சிஷ்யராவர். அவர் கூறிய சிவனது பெருமைகளின் தொகுப்பே சிவ புராணமாகும்.
சோதிர் லிங்க தோற்றம், திருமாலிற்கும் பிரம்மாவிற்கும் வரம் கொடுத்தது, சிவலிங்கத்தின் மகிமை, சிவ பூஜைக்கான விதிமுறைகள், சிவ பூஜை மந்திரங்கள், மன்மதன் எரிப்பு என பல்வேறு சிவபெருமைகளை இந்நூல் கூறுகிறது.
இப்புராண நூலில் சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகளை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்[6].
இந்து தொன்மவியலின் அடிப்படையில் புராணங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவையாகும். சிவபெருமான் புராணங்களை கூற நந்தி தேவர் முதலில் அறிந்தார். அதன் பின் சனத் குமாரருக்கு புராணங்களை எடுத்துரைத்தார். சனத் குமாரரிடமிருந்து புராணங்களைப் பெற்ற வியாச முனிவர் அதை தொகுத்தார். [7]
சிவபுராணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,.
- கந்த புராணம்
- வாமன புராணம்
- மச்ச புராணம்
- வராக புராணம்
- மார்க்கண்டேய புராணம்
- இலிங்க புராணம்
- பௌடிக புராணம்
- பிரம்மாண்ட புராணம்
- சைவ புராணம்
- கூர்ம புராணம்[8]
Remove ads
மேற்கோள்கள்
தொடர்புடையவை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads