சிவலிங்கம் சிவானந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் (Sivalingam Sivananthan) என்பவர் அமெரிக்கத் தமிழரும், கல்விமானும், அறிவியலாளரும், தொழிலதிபரும், சிகாகோ இலினொய் பல்கலைக்கழகத்தின் நுண்ணியற்பியல் ஆய்வுக்கூடத்தின் பணிப்பாளரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்வும் குடும்பமும்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி நகருக்கு அருகே மட்டுவில் என்ற கிராமத்தில்[1] ஆசிரியர்களான சிவலிங்கம், பாக்கியம் ஆகியோரின் ஒன்பது பிள்ளைகளில் ஆறாவதாகப் பிறந்தவர் சிவானந்தன். தந்தை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொன்ட ஓர் தமிழாசிரியர். தாய் அறிவியல், சமய ஆசிரியை.[1] மட்டுவில் சரசுவதி மகா வித்தியாலயம், சாவகச்சேரி ட்ரிபேர்க் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1968-75) ஆகிய பாடசாலைகளில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியைக் கற்றார்.[1][2][3] பாடசாலைப் படிப்பை முடித்த பின்னர் 1976 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டப் படிப்பிக்காக சேர்ந்தார். 1980 ஆம் ஆண்டில் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்று வெளியேறினார்.[1][3][4]
Remove ads
பணி
பட்டம் பெற்ற பின்னர் சிவானந்தன் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இயற்பியலில் உதவி-விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1982 ஆம் ஆண்டில் பட்டப்பின்படிப்புக்காக சிகாகோ இலினொய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.[1] 1985 ஆம் ஆண்டில் இயற்பியலில் முதுநிலைப் பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3][4] தற்போது இவர் இப்பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராகவும், நுண்ணியற்பியல் ஆய்வுக்கூடத்தில் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[4]
1998 ஆம் ஆண்டில் சிவானந்தன் வணிகத் துறையில் காலடி வைத்தார். எப்பிர் டெக்னொலொஜீசு (EPIR Technologies Inc.) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.[5] இலினொய், பொலிங்புரூக் என்ற இடத்தில் சிவானந்தன் ஆய்வுக்கூடம் (Sivananthan Laboratories Inc.) என்ற பெயரில் சொந்த ஆய்வுக்கூடம் ஒன்றையும் நிறுவி நடத்தி வருகிறார்.[1][2][3]
Remove ads
விருதுகள்
2013 மே மாதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இவருக்கு "மாற்றத்துக்கான சாதனையாளர்" ("Champion of Change") விருது வழங்கியது.[1][2] அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் புலம்பெயர் தொழில்முனைவர்களுக்கும், புதிய கண்டுபிடிப்பாளர்களுக்குமான பிரிவில், பேராசிரியர் சிவானந்தனுக்கு இருளை ஊடுருவிப் பார்க்கக்கூடிய (Night Vision) தொழில்நுட்பத்தை மேம்படுத்தியமைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads