சிவக்கொழுந்து சிவாசாரியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவக்கொழுந்து சிவாசாரியார் என்பவரைச் சிவாக்கிர யோகிகள் எனவும் வழங்குவர். இவரது காலம் 16-ஆம் நூற்றாண்டு. சிவக்கொழுந்து தேசிகர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சைவ சித்தாந்த பரம்பரைகள் இரண்டில் ஒன்றான சிவாக்கிர யோகிகள் பரம்பரை இவர் பெயரை முன்னிலைப்படுத்துகிறது.
இவர் வேளாள மரபில் தோன்றியவர். அருக்கவனம் என்னும் சூரியனார் கோவில் ஊரின் தெற்கு வீதியில் இவர் தமக்கென ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு ஞானம் பரப்பிவந்தார். திருவீழிமிழலை என்னும் ஊரில் அக்கால அரசன் கட்டித் தந்த மடத்திலும் இவர் வாழ்ந்தமையால் இவரை 'மிழலைச் சிவாக்கியார்' எனவும் வழங்கினர்.
Remove ads
இவர் எழுதிய நூல்கள்
- சிவஞானபோத விருத்தி - சிவஞானபோதம் வடமொழிச் சிலோகம் பன்னிரண்டுக்கும் தமிழில் எழுதப்பட்ட உரை [1]
- சிவநெறிப் பிரகாசம்
- சிவஞான சித்தியார் உரை
- சைவபரிபாஷை (வடமொழி நூல்)
- கிரியா தீபிகை (வடமொழி நூல்)
- சைவ சந்நியாச பத்ததி (வடமொழி நூல்)
- சிவாக்கிர பாஷ்யம் (வடமொழி நூல்)
- சிவஞானபோத லகுடீகை (வடமொழி நூல்) இது தமிழ் மொழிபெயர்ப்போடும் வெளிவந்துள்ளது.[2][3]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads