சூரியனார் கோவில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரியனார் கோயில் (Suryanar Koyil) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோயிலை அடையலாம். இந்த கோயில் ஒன்பது நவக்கிரகக் கோயில்களில் முதன்மையானதாகும்.
Remove ads
வரலாறு
கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என தெரிய வருகிறது (பொ.ஊ. 1060–1118).[1]
கட்டிடக்கலை
சூரியனார் கோயில் தலம் கும்பகோணத்திற்கு கிழக்கே அமையப் பெற்றுள்ளது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலைக்கும் ஆடுதுறைக்கும் இடையே 2 கி.மீ. (1.2 மைல்கள்) தூரம் உள்ளது. திருபனந்தாள் மற்றும் கீழ் அணைக்கட்டிலிருந்து நேரடி சாலை வசதி உள்ளது. இக்கோயில் நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் எழும்பியுள்ளது.
விபரங்கள்
- இறைவன்: சூரிய தேவன்
- தல விருட்சம்: எருக்கு
- நிறம்: சிவப்பு
- வச்திரம்: சிவப்பு துணி
- மலர்: தாமரை, எருக்கு
- இரத்தினம்: மாணிக்கம்
- தான்யம்: கோதுமை
- வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு தேர்
- உணவு: பொங்கல் (உணவு), ரவை, கோதுமை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads