சிவாஜிராவ் ஓல்கர்

From Wikipedia, the free encyclopedia

சிவாஜிராவ் ஓல்கர்
Remove ads

சர் சிவாஜி ராவ் ஓல்கர் (Shivaji Rao Holkar) (1859 நவம்பர் 11 - 1908 அக்டோபர் 13) மராட்டியர்களின் ஓல்கர் வம்சத்தைச் சேர்ந்த இவர் இந்தோரின் மகாராஜா ஆவார். இவர் இரண்டாம் துகோஜிராவ் ஓல்கர் [1]மற்றும் பார்வதி பாய் ஆகியோரின் மகனாவார். மத்திய இந்தியாவின் புகழ்பெற்ற பள்ளியான இந்தோரின் தேலி கல்லூரியில் கல்வி [2][3] [4] [5] பயின்றார்.

விரைவான உண்மைகள் சிவாஜிராவ் ஓல்கர், இந்தோரின் மகாராஜா ...
Remove ads

வாழ்க்கை

1886 சூன் 17 அன்று இவரது தந்தை இறந்தபோது பதவிக்கு வந்தார். விக்டோரியா மகாராணியின் பொன்விழா 1887 ஜூன் 20 அன்று விக்டோரியா மகாராணியின் ஆட்சியின் பதினைந்து ஆண்டு நிறைவை முன்னிட்டு 1837 சூன் 20 அன்று ஒரு விருந்துடன் கொண்டாடப்பட்டது. இதில் 50 ஐரோப்பிய மன்னர்களும் ஆசிய இளவரசர்களும் அழைக்கப்பட்டனர். [6] இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக 1887இல் இங்கிலாந்துக்குச் சென்ற இவருக்கு, 1887 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் தேதி வீரத்திருத்தகை கௌரவம் வழங்கப்பட்டது.

Thumb
சிவாஜிராவ் ஓல்கரின் வெள்ளி ரூபாய் 1886-1903, விக்ரம் நாட்காட்டி 1948 (1891) இல் இந்தோரில் அச்சிடப்பட்டது.

இவரது நிர்வாகம் மோசமாக இருந்தது. 1854 ஆம் ஆண்டு முதல் இந்தோரில் அரசப்பிரதிநிதி இல்லாமல் இருந்தது. ஆனால் 1899 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள் ஒரு புதிய அரசப்பிரதிநிதியை நியமித்தனர். 1902 ஆம் ஆண்டில் பிரிட்டிசு இந்தியாவின் நாணயத்தால் இவரது அரசின் நாணயம் மாற்றப்பட்டது.

Remove ads

பதவி விலகல்

இவர் 1903 சனவரி 31 அன்று தனது மகன் மூன்றாம் துகோஜிராவ் ஓல்கருக்கு ஆதரவாக பதவி விலகினார்.

குடும்பம்

1865 ஆம் ஆண்டில் இவர் கிரிஜா பாய் என்பவரை மணந்தார். மேலும் இவருக்கு வாரணாசி பாய், சந்திரபாக பாய் மற்றும் சீதா பாய் என்ற மனைவிகள் இருந்தனர்.

இறப்பு

1908 அக்டோபர் 13 அன்று மகேசுவரில் காலமானார். இவருக்கு இரண்டு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads