மராத்தா

ஜாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

மராத்தா (Maratha, வழமையாக மராட்டா அல்லது மகாராட்டிரா எனவும் ஒலிப்பெயர்க்கின்றனர்) மகாராட்டிரத்தில் பெரும்பான்மையினராக வாழும் ஓரினமாகும். இது இரண்டு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றது: மராத்தி பேசும் மக்களிடையே முதன்மையான மராத்தா சாதியினரைக் குறிக்கிறது; வரலாற்றில் இச்சொல் பதினேழாவது நூற்றாண்டில் பேரரசர் சிவாஜி நிறுவிய மராட்டியப் பேரரசையும் அதன் வழித்தோன்றல்களையும் குறிக்கிறது.[2]

விரைவான உண்மைகள் மராத்தா, வகைப்பாடு ...

மராத்தாக்கள் முதன்மையாக இந்திய மாநிலங்களான மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, கருநாடகம் மற்றும் கோவாவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பகுதி மற்றும் பேசும் மொழியை ஒட்டி கோவாவிலும் அடுத்துள்ள கார்வாரிலும் வாழும் மராத்தாக்கள் குறிப்பாக கொங்கண் மராத்தாக்கள் எனப்படுகின்றனர்.[3] அதேபோல தமிழ் பேசும் மராத்தாக்கள் தஞ்சாவூர் மராத்தாக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

Remove ads

வருணமும் சாதியும்

Thumb
மராத்தாக்களின் தாயகம் மகாராட்டிரம் (சிவப்பில்) ஆகும்.

மராத்தாக்களின் வருணம் சர்ச்சைக்குரிய விடயமாக விளங்குகிறது. சிலர் இவர்களை சத்திரியர் என்றும் சிலர் இவர்களை விவசாயப் பின்புலம் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவாஜியின் காலத்திலிருந்தே இது குறித்து பிராமணர்களுக்கும் மராத்தாக்களுக்கும் விவாதங்கள் நடந்தேறியுள்ளன; இருப்பினும் 19வது நூற்றாண்டில் பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற பிராமணர்கள் பாம்பே மாகாணத்தில் பெருவாரியாக இருந்த இவர்களை சத்திரியர்களாக அங்கீகரித்து இணைந்து செயல்பட்டனர். இந்த ஒற்றுமை விடுதலைக்குப் பின்னர் முறிந்தது [4]

இவர்களில் ஒரு பிரிவினரான குன்பி மராத்தாக்களுக்கு பிற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு மராத்திகளுக்கு 2014இல் அப்போதைய மகாராட்டிர அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[5]

Remove ads

உள்நாட்டுப் பரவல்

மராட்டியப் பேரரசின் விரிவாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவில் மராத்தாக்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்னமும் சிறுபான்மையினராக இந்தியாவின் வடக்கு, தெற்கு மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும் தங்கள் அடையாளமாக மராத்தி மொழியை வீட்டினுள் பேசி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக குவாலியரின் சிந்தியாக்கள், வடோதராவின் கெய்க்குவாடுகள், இந்தோரின் ஓல்கர்கள், முதோலின் கோர்பாடேக்கள், தஞ்சாவூரின் போன்சுலேக்களைக் கூறலாம்.[6]

Remove ads

அரசியல் பங்கேற்பு

மகாராட்டிரம் 1960இல் உருவானதிலிருந்தே அம்மாநில அரசியலில் மராத்தாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மகாராட்டிர அரசிலும் உள்ளைர் நகராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் மராத்தாக்கள் அமைச்சர்ளாகவும் அலுவலர்களாகவும் 25% பதவிகளில் பொறுப்பாற்றுகின்றனர்.[7][8] 2012 நிலவரப்படி, மகாராட்டிரத்தின் 16 முதலமைச்சர்களில் 10 பேர் மராத்தா சமூகத்திலிருந்து வந்தவர்களாவர்.[9]

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads