சிவ தாண்டவ தோத்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிவ தாண்டவ தோத்திரம் இராவணனால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும்[1] புகழ்பெற்ற துதி ஆகும். இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப்பாடலாக விளங்குகின்றது. தாளம் போடவைக்கும் நடையும் எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ள அதே வேளை, அதில் மயங்கி ஈசனே நடனமாடுவார் என்ற பொருளில் "சிவ தாண்டவ தோத்திரம்" எனும் பெயர் காரணப் பெயராகவும் அமைகின்றது.
வரலாறு
செருக்கோடு கயிலையைத் தூக்கி, அதன்கீழ் நசுங்குண்ட இராவணன், அதிலிருந்து மீள்வதற்காக இத்துதியைப் பாடி, ஈசனைக் குளிர்வித்ததாகச் சொல்லப்படுகின்றது, இத்துதியைப் பாடியபின்னர் தான், "சந்திரகாசம்" எனும் புகழ்பெற்ற வாளை, அவனுக்குச் சிவன் வழங்கினார்.[2]
பாடல்
சங்கத இலக்கியத்தின் படி, "பஞ்சசாமர சண்டம்" எனும் பதினாறு வரிகள் கொண்ட பாடலாக இது அமைந்துள்ளது. சிவ தாண்டவ தோத்திரத்தின் இறுதி சுலோகத்தில் வருகின்ற "எப்போது நான் மகிழ்வோடு இருப்பேன்?" என்ற ஏக்கம் மிகுந்த வினா, இந்நாளைய பக்தர்களுக்கும் பொருந்துவதாக அமைகின்றது.
सार्थशिवताण्डवस्तोत्रम् |
தேவநாகரி |
தமிழ் |
அடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, "டம டம" என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக! |
தேவநாகரி |
தமிழ் |
சுருள்சடையாலான குளத்தில் அலைவீசி ஆடும் கங்கையும், திருநெற்றியில் கனல் வீசும் தீயையும், இளம்பிறையை அணிகல்னாகவும் கொண்டுள்ள சிவனை நான் போற்றுகின்றேன். |
தேவநாகரி |
தமிழ் |
பரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன். |
தேவநாகரி |
தமிழ் |
வாழ்க்கைக்கு ஆதாரமானவனும், கொடியொத்த கழுத்து நாகத்தின் செங்கபில நிற நாகமாணிக்கம் எங்கும் ஒளிவீசித் தென்படத் திகழ்பவனும், பல திசைகளும் நிறைந்து (உன்னைப் போற்றும்) மாதரின் முகங்களில், அந்த மாணிக்கத்தின் கதிர்கள் பலவண்ணக் கோலமிடவும், மதயானையின் உருபோர்த்து அருளொளி வீச அமர்ந்திருப்பவனுமாகிய சிவனைக் கண்டு என்னுள்ளம், களித்தாடுகின்றது. |
தேவநாகரி |
தமிழ் |
சகோரப்பறவையின் தோழனை (நிலா) தலையணிகலனாகக் கொண்டவனும், செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவனும், அரி - இந்திராதி தேவர்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் மகரந்தத் தாதினால் சாம்பல் நிறமாகக் காணப்படும் பாதங்களை உடையவனுமான ஈசன் எமக்கு சகல வளங்களும் நல்குக. |
தேவநாகரி |
தமிழ் |
இளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக |
தேவநாகரி |
தமிழ் |
முக்கண்ணனும், நுதல்விழியிலிருந்து தகதகவென எரியும் தீயால், காமனை எரித்தவனும், மலையரசன் மகளின் மார்பில் தொய்யில் எழுதி மகிழ்பவனுமான ஈசனைப் பணிகின்றேன். |
தேவநாகரி |
தமிழ் |
உலகெலாம் தாங்குபவனும், பிறையணி அழகனும், பொன்னார் மேனியனும், கங்கையணி வேணியனும், முகில் நிறைந்த இரவை ஒத்த கருநிறக் கழுத்தனுமான ஈசன் எமக்கு மங்கலம் அருள்க! |
தேவநாகரி |
தமிழ் |
உலகன் கரும்பாவன்கள், மலர்ந்த நீலத்தாமரைகள் எனக் காட்சியளிக்கும் கறைக்கண்டனும், மதனனை எரித்தவனும், முப்புரம் காய்ந்தவனும், பற்றுக்களை அறுப்பவனும், தக்க வேள்வியை அழித்தவனும், அந்தகனை வதைத்தவனும், கயாசுரனை அழித்தவனும் இயமனை உதைத்தவனும் ஆன ஈசனைப் பணிகின்றோம். |
தேவநாகரி |
தமிழ் |
வண்டார்க்கும் கடம்ப மலர்களைச் சூடியவனும், மதனன், முப்புரம், பற்றுக்கள் வேள்சி, அந்தகன், கயாசுரன், இயமன் ஆகியோரை ஒழித்தவனுமான ஈசனைப் பணிகின்றோம். |
தேவநாகரி |
தமிழ் |
திமிதிமி என மிருதங்கம் ஒலியெழுப்ப, அதற்கு இசைந்தாடுபவனும், நுதல்விழியில் தீயைக் கொண்டவனும், தீகக்கும் மூஉச்சைக் கொண்ட நாகம் சீறத் திகழ்கின்றான் சிவன். |
தேவநாகரி |
[{தமிழ்]] |
மக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ? புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ? நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ? மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ? மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ? சொல்க என் இறைவா! |
தேவநாகரி |
தமிழ் |
கங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ? என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ? அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க. |
தேவநாகரி |
தமிழ் |
இம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை. |
தேவநாகரி |
தமிழ் |
தினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக. |
தேவநாகரி |
தமிழ் |
இத்தால் இராவணன் அருளிய சிவ தாண்டவ தோத்திரம் முற்றிற்று |
Remove ads
மேலும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads