சி. லட்சுமி ராச்சியம்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
லட்சுமிராச்சியம் என சுருக்கமாக அழைக்கபடும் சி. லட்சுமி ராச்சியம் (C. Lakshmi Rajyam, 1922-1987) என்பவர் 1930 கள் முதல் 1970 கள் வரை தெலுங்கு, தமிழ் திரைப்பட, நாடக நடிகையாக இருந்தவராவார். இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளருமாவார்.[1]
லட்சுமிராச்சியம் தற்போதைய ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஔகுவை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதிலேயே மாமா நரசிம்மத்திடம் இசையும், சாலூரி ராஜேஸ்வர ராவிடம் ஹரிகதா காலட்சேபமும் கற்றார். தன் மாமா வெங்கட ராமையாவுடன் சேர்ந்து புவ்வுலா சூரி பாபுவின் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். துலாபாரம் நாடகத்தில் நளினியாகவும், சிந்தாமணி நாடகத்தில் சித்ராவாகவும் நடித்து புகழ் பெற்றார். இவரது சமகாலத்தவர்களாக புலிபட்டி வெங்கடேஸ்வர்லு, புவ்வுலா ராமதிலகம் ஆகியோர் இருந்தனர்.
இவர் ஸ்ரீ கிருஷ்ணா லீலாலு (1934) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தெலுங்கு மொழியின் 35 படங்களில் நடித்தார். குடவள்ளி ராமபிரம்மம் இயக்கிய இல்லாலு (1940) படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையானார்.
அவர் கே. ஸ்ரீதர் ராவை மணந்து 1951 இல் ராஜ்யம் பிக்சர்சை நிறுவினார். அவர்கள் தாசி (1952), கிருஷ்ண லீலாலு (1959), ஹரிச்சந்திரா (1960), நர்த்தனசாலா (1963), சகுந்தலா (1966), கோவுல கோபண்ணா (1968), ரங்கேலி ராஜா (1971) உட்பட சுமார் 11 படங்களைத் தயாரித்தனர்.
Remove ads
திரைப்படவியல்
தமிழ் படங்கள்
- வேலைக்காரி மகள் (1953) (நடிகையும், தயாரிப்பாளரும்)
- மரகதம் (1959)
- கொங்கு நாட்டு தங்கம் (1961)
- கானல் நீர் (1961)
- இருவர் உள்ளம் (1963)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads