சீசியம் ஐதராக்சைடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சீசியம் ஐதராக்சைடு (Cesium hydroxide) என்பது CsOH என்ற என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியம் அயனியும் ஐதராக்சைடு அயனியும் சேர்ந்து சீசியம் ஐதராக்சைடு காரம் உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் ஐதராக்சைடு போன்ற பிற கார உலோக ஐதராக்சைடுகள் போலவே சீசியம் ஐதராக்சைடும் ஒரு வலிமையான காரமாகும். உண்மையில், விரைவாக கண்ணாடியை அரித்து அழிக்கும் அளவிற்கு இச்சேர்மம் வலிமை கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

தீவிரமான வினைதிறன் கொண்டிருப்பதால் சீசியம் ஐதராக்சைடு ஒரு நீருறிஞ்சியாக செயல்படுகிறது. ஆய்வகத்தில் பயன்படுத்தும் சீசியம் ஐதராக்சைடுகள் பெரும்பாலும் நீரேற்றுகளாக உள்ளன.

சீசியம் ஐதராக்சைடானது எண்முகத் தளங்களை வெளிப்படுத்துகின்ற வகையில், பண்புச்சீரில்லாதவாறு அரிக்கப்பட்ட சிலிக்கன் போன்றதாகும். இத்தகைய அரித்தல் பண்பால் பிரமீடுகள் உருவாக முடியும் மற்றும் நுண்மின்னணு இயந்திரவியல் திட்டம் போன்ற பிரிவுகளில் வழக்கமாக அரிக்கப்பட்ட இத்தகைய குழிகள் பயன்படும்.

குறைகடத்திகளில் பி-வகை சிலிக்கனை பதியவைப்பதற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐதராக்சைடு காரத்தை விட சீசியம் ஐதராக்சைடு தெரிவுத்திறன் மிகுந்ததாக உள்ளது என அறியப்படுகிறது. ருபீடியம் ஐதராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடுகளை விட வலிமையாக செயல்பட்டாலும், உயர் விலை மதிப்பு காரணமாக பரிசோதனைகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுவதில்லை.

சீசியம் ஐதராக்சைடை கீழ்கண்ட வேதி வினையில் கண்டுள்ளவாறு தயாரிக்க முடியும்.

2 Cs + 2 H2O → 2 CsOH + H2

பைரெக்சு கண்ணாடி குடுவையை நொறுக்குமளவிற்கு வெடியோசையுடன் இவ்வினை நிகழ்கிறது. – 116 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் உள்ள பனிக்கட்டியுடன் சீசியம் உலோகம் வினைபுரியும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads