சீசியம் பெராக்சைடு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

சீசியம் பெராக்சைடு
Remove ads

சீசியம் பெராக்சைடு (Caesium peroxide) என்பது Cs2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து மஞ்சள் நிறத்தில் சீசியம் பெராக்சைடு உருவாகிறது.

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

தயாரிப்பு

சீசியம் உலோகத்தை நேரடியாக ஆக்சிசனேற்றம் செய்து சீசியம் பெராக்சைடை தயாரிக்க முடியும். சீசியம் உலோகத்துடன் விகிதவியல் அளவில் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சீசியம் பெராக்சைடை தயாரிக்கலாம்.[1]

2Cs + O2 → Cs2O2

சீசியம் மீயாக்சைடை சிதைவு வினைக்கு உட்படுத்தியும் சீசியம் பெராக்சைடத் தயாரிக்க முடியும்:[3]

2CsO2 → Cs2O2 + O2

வேதி வினை

சிசியம் பெராக்சைடை சூடுபடுத்தினால் சீசியம் மோனாக்சைடாக சிதைவடையும்.

2Cs2O2 → 2 Cs2O + O2

பெராக்சைட்டு அயனி இருப்பதன் காரணமாக 743 cm−1 அளவில் சீசியம் பெராக்சைட்டு ராமன் நிறமாலையியல் அதிர்வை வெளிப்படுத்துகிறது..[4]

பயன்

குறைவான செயல்திறனைக் கொண்டிருப்பதால் சீசியம் பெராக்சைடு ஒளிநேர்மின்வாய்களில் மேற்பூச்சாகப் பூச பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads