இலித்தியம் பெராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் பெராக்சைடு (Lithium peroxide) என்பது Li2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்துடன் உள்ள இத்திண்மம் நீருறிஞ்சா தன்மையுடன் காணப்படுகிறது. குறைவான அடர்த்தியின் காரணமாக இலித்தியம் பெராக்சைடு விண்கலங்களில் உள்ள வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை நீக்க உதவுகிறது[3].
Remove ads
தயாரிப்பு
இலித்தியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் பெராக்சைடு வினைபுரிவதால் இலித்தியம் பெராக்சைடு உருவாகிறது. இவ்வினை நிகழும்போது முதலில் இலித்தியம் ஐதரோ பெராக்சைடு தோன்றுகிறது:[3].
- LiOH.H2O + H2O2 → LiOOH·H2O + H2O
இந்த இலித்தியம் ஐதரோ பெராக்சைடும் கூட இலித்தியம் பெராக்சைடு ஒருபெராக்சோநீரேற்று முந்நீரேற்று என விவரிக்கப்படுகிறது (Li2O2•H2O2•3H2O). இம்முந்நீரேற்று வடிவச் சேர்மத்தை நீர்நீக்கம் செய்தால் நீரிலியான பெராக்சைடு உப்பு கிடைக்கிறது.
- 2 LiOOH·H2O → Li2O2 + H2O2 + 2 H2O
Remove ads
வினைகள்
450 பாகை செல்சியசு வெப்பநிலையில் Li2O2 சிதைவடைந்து இலித்தியம் ஆக்சைடைக் கொடுக்கிறது.
- 2 Li2O2 → 2 Li2O + O2
எக்சு கதிர் படிகவுருவியல் ஆய்வு மற்றும் அடர்த்தி செயல்பாட்டுக் கோட்பாட்டு ஆய்வுகளின் வழியாக திண்மநிலை இலித்தியம் பெராக்சைடின் கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. ஈத்தேன் அமைப்புக்கு நேரெதிரான " Li6O2 துணை அலகுகளில் O-O பிணைப்பு நீளம் 1.5 Å கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது.
பயன்கள்
எடை முக்கியத்துவம் பெறும் இடங்களில் இலித்தியம் பெராக்சைடும் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக விண்கலங்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிசனை வெளியேற்றி காற்றைத் தூய்மைப்படுத்த இலித்தியம் பெராக்சைடு உதவுகிறது.
- 2 Li2O2 + 2 CO2 → 2 Li2CO3 + O2
இலித்தியம் ஐதராக்சைடு உறிஞ்சும் அளவைவிட அதிகமான கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது என்பதுடன் வினையில் ஆக்சிசனை வெளிவிடுகிறது[4] , மற்ற காரவுலோக பெராக்சைடுகள் போல இல்லாமல் நீரை உறிஞ்சாமலும் இருக்கிறது என்பது போன்ற காரணங்கள் இதன் கூடுதல் சிறப்பாகும்.
முன்னோடி இலித்தியம் காற்று மின்கலன்களில் இலித்தியம் பெராக்சைடின் பின்னோக்கு வினை அடிப்படையாக இருக்கிறது. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசனைப் பயன்படுத்தி, இருப்பிலிருக்கும் ஆக்சிசனை வெளியேற்றி மின்கலனின் அளவையும் எடையையும் காப்பதில் பின்னோக்கு வினை பயனாகிறது[5]
காற்று உட்புகும் சூரிய மின்கலன்களுடன் இணைந்த இலித்தியம் காற்று மின்கலன்களின் வெற்றியை ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகம் [6] சமீபத்தில் அறிவித்துள்ளது. ஒரு கருவியில் இரண்டு செயல்பாடுகள் ( சூரிய மின்கலன்) தனித்தனி கருவிகளைக் காட்டிலும் சிக்கனமாகவும் செயல்திறனுடனும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads