சீலன் கதிர்காமர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீலன் கதிர்காமர் (Silan Kadirgamar, 11 ஏப்ரல் 1934 - 25 சூலை 2015) இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும், இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
சாந்தசீலன் என்ற இயற்பெயரைக் கொண்ட சீலன் கதிர்காமர் 1934 ஏப்ரல் 11 இல் இலங்கையின் வடக்கே சாவகச்சேரியில்[1][2][3][4] வண. ஜெ. டபிள்யூ. ஏ. கதிர்காமர், கிரேசு நேசம்மா இட்ச்கொக் ஆகியோருக்குப் பிறந்தார்.[1][4] ஆரம்ப காலத்தில் மலாயாவில் வாழ்ந்து 1941 முதல் 1945 வரை சிரம்பானில் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.[1][4] பின்னர் 1946 ஏப்ரலில் இலங்கை திரும்பி யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார்.[1][2][4][5] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1959 இல் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1][2][4][6] பேராதனையில் மாணவராக இருக்கும் போது இடதுசாரி அரசியலில் தீவிரமாக இறங்கி, லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவாளரானார்.[2][4]
கதிர்காமர் சகுந்தலா அரசரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[7] இவர்களுக்கு அஜயன், அகிலன் என்ற இரு புதல்வர்கள் உள்ளனர்.[7] சீலன் கதிர்காமர் லக்சுமன் கதிர்காமரின் உறவினர் ஆவார்.[2][8][9]
Remove ads
பணி
கதிர்காமர் யாழ்ப்பாணக் கல்லூரியில் 1959 முதல் 1969 வரை வரலாறு, அரசியல் ஆகிய பாடங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[4][10] பின்னர் 1970 முதல் 1978 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1][4][10] 1974 இல் சப்பான் சென்று அங்குள்ள பன்னாட்டு கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1][2][4] 1979 இல் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை மூத்த விரிவுரையாளரானார். 1982 முதல் வரலாற்றுத் துறைத் தலைவரானார்.[1][4][10][11] 1979 இல் யாழ்ப்பாணத்தில் "இலங்களுக்கிடையே சமத்துவம் மேணும் இயக்கத்தின்" (Movement for Inter-Racial Justice and Equality, MIRJE) கிளை ஒன்றை ஆரம்பித்தார்.[1][2][4][10] 1981 இல் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பிரசைகள் குழுவை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இருந்து பணியாற்றினார்.[1][2][4][10] அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "சற்றடே ரிவியூ" என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவியவர்களில் சீலன் கதிர்காமரும் ஒருவர்.[12]
1983 முதல் 2000 ஆம் ஆண்டு வரை சப்பானில் தோக்கியோ-யோக்கோகாமா நகரங்களில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1][2][4][10]
Remove ads
அரசியலில்
சீலன் கதிர்காமர் இடது விடுதலை முன்னணியின் வேட்பாளராக 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். இக்கட்சியின் உறுப்பினர்கள் எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[13][14] 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினராக தெகிவளை-கல்கிசை மாநகரசபைக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[15][16]
சீலன் கதிர்காமர் 2015 சூலை 25 இல் சில காலம் சுகவீனமுற்ற நிலையில் 2015 சூலை 25 இல் கொழும்பில் காலமானார்.[2][4]
எழுதிய நூல்கள்
- The Jaffna Youth Congress (1980)[2][4]
- Handy Perinbanayagam: A Memorial Volume (1980, Handy Perinbanayagam Commemoration Society)[17]
- Ethnicity: Identity, Conflict and Crisis, (1989, Arena Press, co-editor Kumar David)[18][19]
- The Left Tradition in Lankan Tamil Politics (2001, in Hector Abhayavardhana Felicitation Volume)[2][4][20]
- Jaffna Youth Radicalism – The 1920s and 1930s (2009, in Pathways of Dissent: Tamil Nationalism in Sri Lanka)[21]
- The Tamils of Lanka: Their Struggle for Justice and Equality with Dignity (2010)[2][4]
- Handy Perinbanayagam: A Memorial Volume (2012, Kumaran Book House)[22][23]
- The Jaffna Youth Congress (2013, Kumaran Book House)[24]
- Landmarks in the History of the Left: 1935-1980 (2014, in Pathways of the Left in Sri Lanka)[25]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads