ஜனநாயக மக்கள் முன்னணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People's Front, முன்னர் மேலக மக்கள் முன்னணி (Western People's Front), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது முக்கியமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகிறது.[1]
மேலக மக்கள் முன்னணி ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அரசியல்கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் மனோ கணேசன்.
Remove ads
2011 இல் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 4 சபைகளில் போட்டியிட்டு 10 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் விக்கிரமபாகு கருணாரத்தினவின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.
ஜமமு வென்ற உறுப்பினர்கள்
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads