சுகார்த்தோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகார்த்தோ (Suharto அல்லது Soeharto, (ஜூன் 8, 1921 - ஜனவரி 27, 2008) இந்தோனேசியாவின் முன்னாள் இராணுவத் தலைவரும் அதிபருமாவார். 1967 இலிருந்து 1998 வரை இந்தோனேசியாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவியிலிருந்த அரசியற் தலைவராவார்.
இந்தோனீசியாவின் முதலாவது ஜனாதிபதி சுகர்னோவிடமிருந்து இராணுவத் தலையீட்டின் மூலமும் உள்நாட்டுக் குழப்பங்க்களீன் மத்தியிலும் சுகார்த்தோ ஆட்சியைக் கைப்பற்றினார். தனது 30 ஆண்டுகால ஆட்சியில், சுகார்த்தோ ஒரு காத்திரமான மத்திய அரசாங்கத்தை இராணுவ வழிமுறைக்களில் அமைத்தார். அவரது நிலையான அரசியற் கொள்கை மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அவருக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டது[1]. ஆனாலும் இவரது ஆட்சிக் காலத்தில் மில்லியன் கணக்கில் கம்யூனீஸ்டுக்களும் சீன இந்தோனேசியர்களும் கொல்லப்பட்டனர்[2]. கம்யூனிஸ்டுகள், மற்றும் சீனர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன[3].
ஆனாலும் 1990களில் நாட்டின் பொருளாதார நிலைமை மந்தமடையத் தொடங்கியது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாட்டு ஆதரவு குறையத் தொடங்கிற்று. உள்நாட்டுக் குழப்பங்களின் மத்தியில் மே 1998இல் தனது அதிபர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads