சுகோய் எஸ்யு-30எம்கேஐ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ (Sukhoi Su-30MKI) என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு பல்வகை தாக்குதல் நடத்த ஏதுவான சண்டை வானூர்தியாகும். உருசியாவின் சுகோய் நிறுவனத்தால் எஸ்.யு-30 வானூர்தியின் ஒரு வேறுபட்ட பதிப்பாக இது இந்திய வான்படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் உரிமத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் கட்டப்படுகிறது. இந்த விமானமானது அனைத்து வானிலைகளிலும் பயன்படும் ஒரு நீண்ட தூரம் பறக்க கூடிய போர் விமானமாகும்.
இந்தியா 2000 ஆம் ஆண்டு உருசியாவிடமிருந்து 140 சு-30 எம்கேஐ விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. முதல் உருசிய தயாரிப்பு 2002 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது. முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சு 30எம்கேஐ 2004 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது. 2020 நிலவரப்படி 260 சு-30எம்கேஐ விமானங்களை இந்திய வான்படை இயக்கி வருகிறது.
இந்த விமானம் இந்திய வான்படையின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டது. இது உருசிய, இந்திய, பிரெஞ்சு மற்றும் இசுரேலிய பாகங்களை உபயோகப்படுத்துகின்றது. இதில் சுகோய் நிறுவனத்தின் மற்றோரு தயாரிப்பான சு-35 ரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் பல உதிரி பாகங்களை பயன்படுத்தப்பட்டுள்ளன.
Remove ads
உருவாக்கம்
1995 ஆம் ஆண்டில் உருசியாவின் சுகோய் நிறுவனத்தால் எஸ்.யு-30 வானூர்தியின் ஒரு வேறுபட்ட பதிப்பாக இது இந்திய வான்படைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.[4] இது இந்தியாவில் உரிமத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் கட்டப்படுகிறது. இதில் சுகோய் நிறுவனத்தின் மற்றோரு தயாரிப்பான சு-35 ரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் பல உதிரி பாகங்களை பயன்படுத்தப்பட்டுள்ளன.[5][6] இது உருசிய, இந்திய, பிரெஞ்சு மற்றும் இசுரேலிய பாகங்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு அதிநவீன போர் விமானமாகும்.[7]
இரண்டு வருட மதிப்பீடு மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 30 நவம்பர் 1996 அன்று, இந்தியா இந்த விமானங்களை உருசியாவிடமிருந்து வாங்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[8] அக்டோபர் 2000 இல், 140 விமானங்களின் இந்திய உரிமத் தயாரிப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.[9] டிசம்பர் 2000 இல், முழு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக உருசியாவின் இர்குட்சுக் விமான நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திய வான்படை மொத்தமாக 272 எஸ்.யு-30எம்.கே.ஐ போர் விமானங்களை வாங்க திட்டமிட்டது. இதில் 50 விமானங்களை 2004 ஆம் ஆண்டுக்குள் உருசியா தயாரித்து வழங்கவும், மீதமுள்ள 222 விமானங்களை 2004 இல் தொடங்கி இந்தியாவில் உரிமத்தின் கீழ் தயாரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.[10]
முதல் உருசிய தயாரிப்பு 2002 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது.[11] முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சு 30எம்கேஐ 2004 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது.[12] 2020 நிலவரப்படி 260 சு-30எம்கேஐ விமானங்களை இந்திய வான்படை இயக்கி வருகிறது.[13][14]
Remove ads
பண்புகள்
இந்த விமானமானது இரட்டை வால் அமைப்பை கொண்ட ஒரு போர் விமானமாகும். இதன் உடல் அதிக வலிமை கொண்ட டைட்டானியம் மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் துடுப்புகள் மற்றும் வால் முனையங்கள் வால் கற்றைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. விசைப்பொறிகளுக்கு இடையே உள்ள மையபி பகுதியில் எரிபொருள் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேல் பகுதியில் விமானியின் அறை, ரேடார் மற்றும் மற்ற கட்டுப்பாடு சாதனங்கள் கொண்ட அறை ஆகியவையை உள்ளடக்கியது. இதன் எரிபொருள் கொள்ளவு 3,000 கி.மீ. வரை பறக்க ஏதுவாக உள்ளது. இது ஏறத்தாழ 3.75 மணிநேர தொடர்ந்து வான் வழிப்போர் செய்ய ஏதுவாக உள்ளது. இந்த விமானம் வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்பும் ஒரு கருவியைக் கொண்டுள்ளது. இது சாதாரண செயல்பாட்டின் போது மடக்கி வைக்கப்பட்டுள்ளது.[15][16][17]
Remove ads
சூப்பர் சு-30 எம்கேஐ
2012-ல் ரஷ்யாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்தியா சு-30 எம்கேஐ விமானங்களை சூப்பர் சு-30 ரகத்திற்கு மேம்படுத்த கோரியது.[18] இந்த மேம்படுத்தலின் கீழ் பல பழைய உருசிய அமைப்புகள் நவீன இந்திய அமைப்புகளால் மாற்றப்படும். முதற்கட்டமாக, சுமார் 90 விமானங்கள் இந்த தரத்திற்கு மேம்படுத்தப்படும்.[19] இந்த மேம்படுத்தலின் போது பழைய ரேடார் மற்றும் இயந்திர பொறி மேம்படுத்தப்பட்டது.[20][18]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads