சுச்சி நாக்காமுரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுச்சி நாக்காமுரா (中村 修二, Nakamura Shūji, பிறப்பு: மே 22, 1954, இக்காட்டா, எஃகீமெ, சப்பான்) சப்பானில் பிறந்து, ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா பார்பராவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்[1] . இவர் 2014 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார். நீலநிற ஒளியுமிழ் இருமுனையமாகிய நீல ஒளியீரியைக் கண்டுபிடித்தமைக்காக இப்பரிசு இவ்வாண்டு அளிக்கப்பட்டுள்ளது.

Remove ads

பெருமைகளும் பரிசுகளும்

  • 2001 அசாஃகி பரிசு (Asahi Prize) - சப்பானிய செய்தித்தாள் அசாஃகி சிம்புன் வழங்கும் பரிசு.
  • 2002 இயற்பியலுக்கான பெஞ்சமின் பிராங்கிளின் பதக்கம் (Benjamin Franklin Medal in Physics), பிராங்கிளின் கழகம் வழங்குவது.
  • 2006 பின்லாந்தின் மில்லேனியம் தொழில்நுட்பப்பரிசை வென்றார். இது திறன்மை மிக்க, மலிவான ஒளிவாய்களை உருவாக்குவதில் இவருடைய பங்குக்காக அளிக்கப்பட்டது[2][3]
  • 2009 இசுரேலின் தெக்குனியான் நிறுவனம் வழங்கும் ஆர்வி பரிசு[4]
  • 2012 இல் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புத்தாக்கப் படைப்புரிம சட்ட அமைப்பின் அவ்வாண்டுக்கான புத்தாக்குநர் பரிசை வென்றார்[5]
  • 2014 இயற்பியலுக்கான நோபல் பரிசு- உடன் பெற்றவகள் பேராசிரியர் இசாமு அக்காசாக்கி மற்றும் பேராசிரியர் இரோசி அமானோ- நீல நிற ஒளியுமிழ் இருமுனையம் கண்டுபிடித்தமைக்காக[6].
Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

மேலும் படித்தறிய

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads