பின்லாந்து

வடகிழக்கு ஐரோப்பிய குடியரசு நாடு From Wikipedia, the free encyclopedia

பின்லாந்துmap
Remove ads

பின்லாந்து (Finland; Finnish: Suomi [ˈsuo̯mi]  ( கேட்க); சுவீடிய: Finland [ˈfɪ̌nland] (கேட்க)), அதிகாரபூர்வமாக பின்லாந்துக் குடியரசு (Republic of Finland) என்பது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நோர்டிக் நாடுகளில் ஒன்றாகும். இது வடமேற்கில் சுவீடன், வடக்கில் நோர்வே, கிழக்கில் உருசியா, மேற்கில் பொத்னியா வளைகுடா, தெற்கில் பின்லாந்து வளைகுடா, மற்றும் எசுத்தோனியாவின் குறுக்கேயும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. 5.6 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பின்லாந்து 338,455 சதுர கிலோமீட்டர்கள் (130,678 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. எல்சிங்கி இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகையின் பெரும்பாலானோர் பின்னிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பின்னியம், சுவீடியம் ஆகியன அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். 5.2% மக்கள் சுவீடிய மொழி பேசுகின்றனர்.[11] பின்லாந்தின் காலநிலை தெற்கில் ஈரப்பதத்தில் இருந்து வடமுனக் காலநிலை வரை மாறுபடும். நிலப்பரப்பு முதன்மையாக 180,000 க்கும் மேற்பட்ட ஏரிகளைக் கொண்ட ஒரு ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ளது.[12]

விரைவான உண்மைகள் பின்லாந்துக் குடியரசுRepublic of Finland, தலைநகரம் ...

பின்லாந்தில் இறுதிப் பனிப்பாறைக் காலத்திற்குப் பிறகு ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுகள் முதல் மக்கள் வசிக்கின்றனர்.[13] கற்காலம் பல்வேறு வெண்களிமண் பாணிகளையும் மற்றும் கலாச்சாரங்களையும் அறிமுகப்படுத்தியது. வெண்கல, இரும்புக் காலங்கள் பெனோசுக்காண்டியா மற்றும் பால்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பிற கலாச்சாரங்களுடனான தொடர்புகளால் வகைப்படுத்தப்பட்டன.[14] 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, வடக்கு சிலுவைப் போரின் விளைவாக பின்லாந்து சுவீடனின் ஒரு பகுதியாக மாறியது. 1809 இல், பின்னியப் போரின் விளைவாக, பின்லாந்து உருசியப் பேரரசின் ஒரு தன்னாட்சிப் பகுதியாக மாறியது, இதன் போது பின்னியக் கலை செழித்து வளர்ந்தது, விடுதலை பற்றிய உணர்வும் தொடங்கியது. 1906 இல், பின்லாந்து பொது வாக்குரிமையை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடானது. அத்துடன் அனைத்து வயது வந்த குடிமக்களுக்கும் பொது அலுவலகத்திற்குப் போட்டியிடுவதற்கான உரிமையை வழங்கிய உலகின் முதல் நாடாக மாறியது.[15][note 2] 1917 உருசியப் புரட்சியை அடுத்து, பின்லாந்து உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. புதிதாக உருவாகியிருந்த இந்நாடு 1918 இல் பின்னிய உள்நாட்டுப் போரால் பிளவடைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், பின்லாந்து பனிக்காலப் போரில் சோவியத் ஒன்றியத்துடனும், நாட்சி செருமனியுடன் இலாப்லாந்துப் போரிலும் ஈடுபட்டது. அதன் பின்னர் தனது பிரதேசத்தின் சில பகுதிகளை இழந்தது, ஆனால் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

1950கள் வரையிலும் பின்லாந்து பெரும்பாலும் ஒரு வேளாண்மை நாடாகவே விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர், அது விரைவாகத் தொழில்மய நாடாக மாறியதோடு, மேம்பட்ட பொருளாதாரத்தையும் உருவாக்கியது. அதே வேளையில் நோர்டிக் மாதிரியின் அடிப்படையில் ஒரு விரிவான நலன்புரி அரசை உருவாக்கியது; நாடு விரைவில் பரவலான செழிப்பையும் அதிக தனிநபர் வருமானத்தை அனுபவித்தது.[16] பனிப்போரின் போது, பின்லாந்து அதிகாரப்பூர்வமான நடுநிலைக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. பனிப்போர் முடிவில், 1995 இல் பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும், 1999 இல் யூரோ வலயத்திலும், 2023 இல் நேட்டோவிலும் இணைந்தது. கல்வி, பொருளாதாரப் போட்டித்தன்மை, குடியியல் உரிமைகள், வாழ்க்கைத் தரம், மனித மேம்பாடு உள்ளிட்ட தேசிய செயல்திறனின் எண்ணற்ற அளவீடுகளில் பின்லாந்து முன்னணியில் உள்ளது.[17][18][19][20]

பின்லாந்தின் தேசிய காவியமான கலேவலா தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Remove ads

குடியரசுத் தலைவர்கள்

Thumb
பின்லாந்தின் 11 குடியரசுத் தலைவர், டார்ஜா ஹேலோனென்.
Thumb
பின்லாந்தின் தற்போதைய குடியரசுத் தலைவர்,சௌலி நீனிசுட்டோ
மேலதிகத் தகவல்கள் குடியரசு தலைவர்கள், பெயர் ...
Remove ads

நகராட்சிகள்

மேலதிகத் தகவல்கள் நகராட்சி, மக்கட்தொகை ...
Remove ads

குறிப்புகள்

  1. பின்லாந்து-சுவீடியர், ரொமானி, சமி மக்கள் உள்ளடங்கலாக.
  2. 1906 ஆம் ஆண்டு அனைத்து (வயது வந்த) குடிமக்களுக்கும் முழு வாக்குரிமையை வழங்கிய உலகின் முதல் நாடு பின்லாந்து ஆகும். நியூசிலாந்து 1893 இல் வயது வந்த ஆண்கள் மட்டும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய முதல் நாடாகும். ஆனால் 1919 வரை நியூசிலாந்து சட்டமன்றத்திற்கு போட்டியிட பெண்களுக்கு உரிமை கிடைக்கவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads