சுத்தபிடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுத்தபிடகம் அல்லது சூத்திர பிடகம், கௌதம புத்தரின் போதனைகளையும் தத்துவங்களையும் நேரடியாக பாலி மொழியில் கொண்டுள்ளது. இது ஞான போதனைகள் மூலம் ஒருவரின் உள்ளொளொளியை வெளிப்படுத்துதல் அல்லது ஆத்ம விடுதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.[1][2]இதனை தொகுத்தவர் புத்தரின் முதனமைச் சீடர்களில் ஒருவரான ஆனந்தர் ஆவார். புத்தரின்்் ஒன்றுவிட்ட சகோதரர்
பிரிவுகள்
சுத்தபிடகம் தீக நிகாயம், மஜ்ஜிம நிகாயம், ஸம்புக்த நிகாயம், அங்குத்தர நிகாயம், குட்டக நிகாயம் என்னும் ஐந்து பிரிவுகளையுடையது. ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்துக்குப் பதினைந்து உட்பிரிவுகள் உள்ளன. அவைகள்:
- குட்டகபதம்
- தம்மபதம்
- உதானம்
- இதிவுத்தகம்
- ஸத்த நிபாதம்
- விமானவத்து
- பேதவத்து
- தேரகாதை
- தேரி காதை
- ஜாதக கதைகள்
- மஹாநித்தேசம்
- படிஸம்ஹித மக்கம்
- அபதானம்
- புத்த வம்சம்,
- சரியாபிடகம்.
சுத்தபிடகத்தின் உரைகளும், உரையாசிரியர்கள்
ஆச்சாரியர் புத்தகோசர் சூத்த பிடகத்தின் முதல் நான்கு பிரிவுகளுக்கு பாளி மொழியில் உரை எழுதியுள்ளார். தீக நிகாயத்துக்கு சுமங்களவிலாசினீ என்னும் உரையையும், மஜ்ஜிம நிகாயத்துக்கு பபஞ்ச சூடனீ என்னும் உரையையும், சம்புக்த நிகாயத்துக்கு சாராத்த பகாசினீ என்னும் உரையையும், அங்குத்தர நிகாயத்துக்கு மனோரத பூரணீ என்னும் உரையையும் எழுதியுள்ளார்.
சூத்தபிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத் தின் உட்பிரிவாகிய குட்டக பாதத்திற்குப் பரமார்த்த ஜோதிகா என்னும் உரையையும், தம்ம பதத்திற்கு தம்மபதாட்டகதா என்னும் உரையையும் புத்தகோசர் எழுதியுள்ளார்.
உதானம், இதிவுத்தகம் என்னும் பிரிவுகளுக்குப் பரமார்த்ததீபனீ என்னும் உரையைத் தமிழராகிய ஆச்சாரிரியர் தர்மபால மகாதேரர் எழுதியுள்ளார்.
ஐந்தாவது உட்பிரிவாகிய சுத்த நிபாதத்திற்குப் பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை ஆசாரிய புத்தகோசர் எழுதியுள்ளார். விமானவத்து, பேதவத்து, தேரகாதை, தேரிகாதை என்னும் நான்கு உட்பிரிவுகளுக்குத் தமிழராகிய ஆசாரிய தம்ம பாலர் மகாதேரர், பரமார்த்த தீபனீ என்னும் உரையை எழுதியுள்ளார்.
ஜாதகம் என்னும் உட்பிரிவுக்கு ஜாதகாத்த கதா என்னும் உரையை புத்தகோசர் எழுதியுள்ளார். நித்தேசம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பஜ்ஜோ திகா என்னும் உரையை உபசேனர் என்பவர் எழுதியுள்ளார். படிஸம்ஹித மக்கம் என்னும் பிரிவுக்கு ஸத்தம்ம பகாஸினீ என்னும் உரையை மகாநாமர் என்பவர் எழுதியுள்ளார். அபதானம் என்னும் பிரிவுக்கு விசுத்தசன விலாஸினீ என்னும் உரையை ஒருவர் எழுதியுள்ளார். ஆனால். அவர் பெயர் தெரியவில்லை. புத்த வம்சம் என்னும் பிரிவுக்கு மதுராத்த விலாஸினீ என்னும் உரையை சோழநாட்டுத் தமிழராகிய ஆசாரிய புத்ததத்த தேரர் எழுதினார். சரியா பிடகம் என்னும் பிரிவுக்கும் பரமார்த்த தீபனீ என்னும் உரையை ஆசாரிய தம்மபால மகாதேரர் எழுதினார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads