சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

From Wikipedia, the free encyclopedia

சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
Remove ads

சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (Estádio Olímpico João Havelange, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [iʃˈtadʒw oˈɫĩpiku ˈʒwɐ̃w̃ ɐveˈlɐ̃ʒi]; ழ்சுவா ஹவலாஞ்ஜ் ஒலிம்பிக் விளையாட்டரங்கம்}}) பிரேசிலின் இரியோ டி செனீரோவிலுள்ள பல்பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். இது இரியோவின் எஞ்சென்யாவ் டெ டென்ட்ரோ புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இது பெரும்பாலும் காற்பந்தாட்டங்களுக்கும் தடகள விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. போடாபோகோ காற்பந்துச் சங்கத்தின் தாயக விளையாட்டரங்கமாக உள்ளது. 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது தடகள விளையாட்டுப் போட்டிகள் இங்குதான் நடைபெறும்.[2][needs update]

விரைவான உண்மைகள் அமைவிடம், பொது போக்குவரத்து ...

இந்த விளையாட்டரங்கம் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. எஞ்சென்யாவ் என அமைவிடத்தை ஒட்டி குறிப்பிடப்படுகின்றது. 2015 முதல் இரியோ நகரவை இந்த விளையாட்டரங்கத்தை நில்டன் சான்டோசு விளையாட்டரங்கம் ( Estádio Nilton Santos) என அழைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரேசிலிய காற்பந்து வரலாற்றில் ஒப்பற்ற பாதுகாப்பு வீரராக விளங்கிய நில்டன் சான்டோசு நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது.[5]

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads