2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2016 Summer Paralympics, பிரேசிலிய போர்த்துக்கேயம்: யோகோசு பாரலிம்பிகோசு தெ வெரோ தெ), பன்னாட்டு இணை ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவால் மாற்றுத்திறனாளர்களுக்காக நடத்தப்படும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டியான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பதினைந்தாவது பதிப்பு ஆகும். இது 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 18 வரை பிரேசில் நாட்டில் இரியோ டி செனீரோ நகரத்தில் நடைபெற உள்ளது. நடத்தும் நாட்டின் குளிர்காலத்தில் நிகழும் முதல் கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ளது. தவிரவும் இந்நிகழ்வை இலத்தீன் அமெரிக்க, தென் அமெரிக்க நகரமொன்று ஏற்று நடத்துவது முதல்முறையாகும். தெற்கு அரைக்கோளத்தில் இந்நிகழ்வு இரண்டாம் முறையாக நடக்கின்றது; முதன்முறை 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்றது.[3]
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads