சு. நாகராஜ மணியகாரர்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சு. நாகராஜ மணியகாரர் (28 திசம்பர் 1908-21 சூலை 1978) கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரரும், 1957 முதல் 1962 வரை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பிராக இருந்தவரும் ஆவார்.[1]
வாழ்க்கை
இவர் தந்தை பெயர் சைவதீத்தம் வி.சுப்பிரமணியகார். தாயார் பெயர் சந்திரம்மாள். கல்வி எம்.ஏ பட்டப்படிப்பு. இவரது மனைவிபெயர் ராணி சென்னம்மா.
விடுதலைப் போராட்டம்
பள்ளிப் பருவத்திலேயே விடுதலை வேட்கையால் ஈர்க்கப்பட்டவர். 1930ஆம் ஆண்டிலிருந்து ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், உப்புசத்தியாகிரகம், அந்நிய துணிகளை எரித்தல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு சிறைசென்றார். 1939 இல் காந்தியடிகளின் அறைககூவலை ஏற்று கிருட்டிணகிரியில் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைதாகி வேலூர் சிறையில் ஆறுமாத சிறைதண்டனை அனுபவித்தார்.
பணிகள்
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருட்டிணகிரி அருகே காமராசர் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டது. இவ்வணை கட்டப்பட்டதில் இவரின் பங்கு முதன்மையானது. பூமிதான இயக்கத்தலைவர் ஆசார்ய வினோபாபா 1954 இல் காவேரிபட்டணம் வந்தபோது பூமிதான இயக்கத்துக்காக ஒரு ஏக்கர் நஞ்சை நிலத்தைத் தானமாகத் தந்தார். வ.உ.சி தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்துள்ளார்.
காங்கிரசிலிருந்து விலகல்
1967ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடு பிடிக்காமல் காங்கிரசிலிருந்து விலகி, குமரி அனந்தன் தொடங்கிய காந்தி காமராசர் தேசிய காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராகவும், அதன் முக்கிய ஆலோசகராகவும் செயல்பட்டார்.
வகித்த பதவிகள்
- ஒசூர் பொது கிராமத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக 1946-1952
- கிருட்டிணகிரி சட்டமன்ற உறுப்பினராக 1957-1962
- தலைவர், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
- பேரூராட்சி தலைவர், காவேரிபட்டணம்
- தலைவர், கவேரிபட்டணம் நகர கூட்டுறவு வங்கி
- தலைவர், காவேரிபட்டணம் வீடுகட்டுவோர் சங்கம்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads