சூரசேனதேசம்

From Wikipedia, the free encyclopedia

சூரசேனதேசம்
Remove ads

சூரசேனதேசம் சந்திர வமிசத்தில் பிறந்து சூரத்தன்மை பொருந்திய படைகளைச் சேர்த்தும், தானும் அதிதீர, வீர, சூரனாய் அரசாண்ட அரசன் சூரசேனன். அவனது ஆட்சிக்குட் பட்ட பகுதி சூரசேனதேசமாயிற்று.[1]

Thumb

இருப்பிடம்

குருதேசத்திற்கு தெற்கிலும், குந்தலதேசத்தின் வடபூமியின் கிழக்கிலும், யமுனை நதியின் மேற்கு கரையில் சால்வதேசத்திற்கு நேர் கிழக்கிலும், பரந்துவிரிந்த நிலபரப்பானது. இத்தேசத்தின் பூமி அமைப்பு மட்டமானது, மிகவும் தாழ்ந்து யமுனையின் நீர்மட்டத்திற்கு கீழ்பட்டதாகவே இருக்கும்.[2]

பருவ நிலை

இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும். விசுவாமித்திரர் ஆசிரமம் இந்த தேசத்தின் தென்மேற்கில் புஷ்கரம் என்ற ஏரியின் கரையில் இன்றும் உள்ளது( ஆண்டு 1918).

மலை, காடு, மிருகங்கள்

இந்த தேசத்தின் வடக்கேயும், சிறிய மலைகள் உண்டு, இம்மலைகளில் மிக முக்கியமானது கோவர்த்தனம் ஆகும். மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான பசுக்களும், நீலப்பசுக்களும், அதிகமான தாமரைக் குளங்களும், சரபுன்னை, புந்நாகம், தேவலிங்கை, கடம்பு, நாவல், மா, பலா, கொங்கு, குடசம் என்னும் குடமல்லிகை, செண்பகம், பாரிசாதம் ஆகிய மரங்கள் ஏராளமாய் இருக்கும்.

ஆறு வித ருது

ஒரு ருதுவிற்கு இரண்டு, மாதங்கள் வீதம் ஆறு ருதுக்கள் இருந்துள்ளது. அவை

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், ருதுவின் பெயர் ...
Remove ads

நதிகள்

இந்த தேசத்தின் வடக்கிலும் கிழக்கிலும் மிக ஆழமானதும், கருமையான நிறமுடைய நீர் நிறைந்து ஓடுகிற ஜீவ நதியான யமுனையும், இத்தேசத்தின் மேற்கிலிருந்து கோவர்த்தன மலையிலிருந்து சிறு, சிறு நீர் ஓடைகள் ஓடி, யமுனை நதியுடன் கலந்து விடும் நதிகள் முக்கியமானவை.

விளைபொருள்

இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.

நகரம்

மதுரை இத்தேசத்தின் முக்கிய நகராகும். இந்நகரத்திற்கு கிழக்கில் சிற்ப சாத்திர முறைப்படி கட்டிய கோட்டைகள், பெரிய, பெரிய அரண்மனைகள், நிறைந்த கோகுலம் என்ற நகரமும் இருந்துள்ளன. இந்த கோகுலத்தை திருவாய்ப்படி என பெரியாழ்வாரால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கருவி நூல்

சான்றடைவு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads